அஜித்துக்கு தங்கச்சி, ஆனால் விஜய்க்கு? பாடகி சிவாங்கியை வெளுத்து வாங்கிய தளபதி ரசிகர்கள்.

0
28963
Shivaangi
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் நடிப்பில் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் தல அஜித்தும், தளபதி விஜய்யும் தான். இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அது எல்லாருக்குமே தெரியும். தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் பட்டாளம் அதிகம். மேலும், தமிழ்நாட்டில் எந்த இடத்திற்குச் சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். மேலும், தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய் தான். அதுமட்டும் இல்லாமல் தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தான் தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தளபதி மற்றும் தலயின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வேற லெவல்ல தெறிக்க விட்டது. அதே போல் இந்த ஆண்டும் இவர்கள் இருவரின் நடிப்பில் வரும் படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்கள். திரை உலகிற்கு இவர்கள் போட்டியாக இருந்தாலும் உண்மையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அஜித், விஜய் இவர்களுடன் படத்தில் சேர்ந்து நடிக்க பல நடிகர்களும், நடிகைகளும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவாங்கி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : லாஸ்லியாவின் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிக் பாஸ் 3 நடிகை. புகைப்படம் இதோ.

அந்த பேட்டியில் கூறியது, எனக்கு தளபதியுடன் தங்கச்சியாகவும், மகளாகவும் நடிக்க ஆசை. அதோட தலையுடனும் தங்கச்சியாக நடிக்க ஆசை. ரஜினி, கமல் ஆகியோருக்கு மகள் கதாபாத்திரம் கொடுத்தால் கூட ஓகே என்று கூறி இருந்தார். தற்போது இப்படி இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு மகள் ஓகே. தலைக்கு தங்கச்சியாக ஓகே. ஆனால், விஜய்க்கு மகள் என்பது கொஞ்சம் ஓவரா இல்லையா. ஏறக்குறைய தல மற்றும் தளபதி இவங்க ரெண்டு பேரும் ஒரே அளவு வயதில் தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-

அப்படி இருக்கும் போது தளபதிக்கு மட்டும் மகளா நடிக்க ஆசை என்று சொல்றீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா. அப்ப எங்க தளபதி விஜய்க்கு வயசாகிடுச்சுன் னு சொல்றீங்களா என்று தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாடகி சிவாங்கியை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், பாடகி சிவாங்கி தற்போது சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்களின் அர்ச்சனையில் திண்டாடி கொண்டு இருக்கின்றார் என்று தான் சொல்லணும். சிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement