ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய பிரபல தயாரிப்பாளர் கபாலி மோகன்.

0
11046
mohan

சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் சிலர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள். அந்த வகையில் கன்னட மொழி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட மொழியில் தயாரிப்பாளராக உள்ளவர் மோகன் வாக்வாடி என்கிற கபாலி மோகன். இவர் பெங்களூரில் பிரபலமான தொழிலதிபர். இவர் ஒரு நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். தயாரிப்பாளர் மோகன் அவர்கள் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்.

Image result for prodcer mohan death

- Advertisement -

இந்த நிலையில் தயாரிப்பாளர் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் மோகன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்து வட்டி வசூல் செய்ததாகவும் புகார் கூறி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ஹண்டா என்ற புதிய வைரஸ். ஒருவர் பலி. என்ன வைரஸ் தெரியுமா ?

-விளம்பரம்-

பின் பெங்களூரில் உள்ள சதாசிவநகரில் உள்ள மோகனின் பங்களா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அவர் வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீஸார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மோகன் அறை எடுத்து தங்கியிருந்தார்.

ஆனால், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவர் தங்கியிருந்த அறையின் கதவை ஓட்டல் ஊழியர்கள் தட்டி பார்த்தனர். ஆனாலும், அவர் திறக்கவில்லை. இதனையடுத்து ஜன்னல் வழியாக ஓட்டல் ஊழியர்கள் எட்டிப் பார்த்தார்கள். அப்போது தயாரிப்பாளர் மோகன் தூக்கில் தொங்கி இருந்தார்.

Image result for prodcer mohan death

உடனே ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய வந்தது தெரியவந்தது. பின் போலீசார் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயரிப்பாளர் மோகன் நிதி நெருக்கடி காரணமாகத் தான் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீசார் கூறுகிறார்கள். இந்த சம்பவம் கன்னடத் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தயரிப்பாளர் மோகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement