சத்தமே இல்லாமல் காதலியை திருமணம் செய்துள்ள பைனலி பாரத்.

0
48576
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் சேனலின் மூலம் பிரபலமானவர் பாரத். அப்பாவியான ஒரு கேரக்டரை வைத்து யூடியூபில் புதிய ட்ரெண்ட்களை உருவாக்கிய சேனல் ஃபைனலி. இந்த பைனலி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் பாரத். அதனாலேயே இவரை அதிகம் பைனலி பாரத் என்று தான் அழைக்கிறார்கள். அப்பாவியான ஒரு பையன். அவனை சுற்றி நடக்கும் விஷயங்கள். இது தான் அந்த பைனலி சேனல் உடைய கான்செப்ட். இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் இவருடைய திருமண வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
பாரத்

- Advertisement -

அதில் அவர் கூறியது, யூடியூப் சேனல் மூலம் சாதிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து இருக்கிறேன். ஆனால், எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. இப்போது நான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு காரணம் இந்த ஃபைனலி சேனல் தான். அதனால் என்னை அனைவரும் பைனலி பாரத் என்று தான் கூப்பிடுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் காமெடி பண்றோம், அப்புறம் ஆங்கெரிங் பண்றோம், மெரினா மாதிரி படத்தில் நடிக்கிறோம், 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குறோம் என்ற கனவோடு நான் சென்னை வந்தேன். எல்லாருக்குமே சென்னைக்கு வரும் போது ஏதோ ஒரு கனவு இருக்க தான் செய்கிறது. அந்த மாதிரி நானும் வந்தேன். ஆனால், இங்க வந்து பல பிரச்சனைகளை சந்தித்தேன்.

-விளம்பரம்-
ஃபைனலி டீம்

அதற்குப் பிறகு இந்த யூடியூப் சேனல் மூலம் என் வாழ்கை தொடங்கி இப்போது எங்களுடைய யூடியூப் ஃபைனலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எனக்கு திருமணம் ஆனது உண்மை தான். ஆனால், என்னுடைய திருமணத்தை நான் யாரிடம் வெளியே சொல்லாமல் ரகசியமாக பாதுகாத்து வந்தேன். ஆனால், எங்களுக்கு உள்ளே ஒரு பிளாக் ஷீப் ஆட்கள் உள்ளார்கள்.

எனக்கு கல்யாணம் ஆனது என்று அடிக்கடி சொல்லி வெளியே தெரியப் படுத்தி விட்டார்கள். சொல்லப்போனால் அவர்கள் என்னுடைய கல்யாணம் கொள்கை பரப்பு செயலாளராக வேலை செய்தார் என்று கூட சொல்லலாம். என்னுடைய கல்யாண வாழ்க்கையும் நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸினால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்களோ அந்த மாதிரி என்னுடைய வாழ்க்கையும் அமைதியாக இருக்கிறது.

எங்களுடைய திருமணம் பார்த்தீங்கன்னா எட்டு வருடம் காதல். எட்டு வருடம் நாங்கள் காதலித்தோம். அதற்கு பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களது ஒரு காதல் திருமணம் என்று புன்னகையுடன் கூறினார். தற்போது ஃபைனலி யூடியூப் சேனல் பாரத் சினிமாவில் நுழைய போகிறார் என்று கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. அதர்வா நடிக்கும் புதிய படத்தில் ஃபைனலி பாரத் நண்பராக நடிக்கிறாராம். மேலும், இவர் ஹீரோவாக நடிப்பதற்கு 3 பட வாய்ப்புகளும் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement