இவருடைய மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என போலீசில் புகார் செய்தார் கந்துவட்டி போத்ரா. இதனால் அவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது, என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் போத்ராவின் வீடு உள்ள பகுதியான தி நகர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையம் கைப்பற்றி அதனை ஆராய்ந்து வருகிறது போலீஸ். இதற்கு முன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை துன்புறுத்தியதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசால் போத்ரா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






