தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார்.

இறுதியாக பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் “ஹீரோ” படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : என்னடா இது, சார்பட்டா டான்சிங் ரோஸுக்கு செண்டிமெண்ட் வில்லனால் வந்த சோதனை.

Advertisement

இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன், டாக்டர், அயலான், டான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ‘டான்’ என்கிற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறா.டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ப்ரியங்கா மோகன் தான் இந்த படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் மிர்ச்சி விஜய் பாலா சரவணன் ஷிவாங்கி ஷாரிக் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் பொள்ளாச்சி ஆனைமலை அருகே முன் அனுமதியின்றி சிபி சக்ரவர்த்தி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இது காட்டிலாக எல்லைக்குள் வரும் பகுதி என கூறப்படுகிறது. அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement
Advertisement