என்னடா இது, சார்பட்டா டான்சிங் ரோஸுக்கு செண்டிமெண்ட் வில்லனால் வந்த சோதனை.

0
1875
dancing
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார்.இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது.

இதையும் பாருங்க : நடிக்க வாய்ப்பு வந்தது நான் தான் நடிக்கல – ஆனா, இவர் படம் இயக்கினால் நிச்சம் அதில் ஹீரோயினா நடிப்பேன்.

- Advertisement -

சார்பட்டா படம் வெளியானதில் இருந்தே சமூக வலைதளத்தில் டான்ஸிங் ரோஸ் வீடியோ வைரலானது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சார்பாக படத்தில் வந்த முக்கிய காட்சி ஒன்றை இளைஞர் ஒருவர் அப்படியே தத்துரூபமாக ரீ கிரியேட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மேலும் அந்த இளைஞரை பல்வேறு யூடியூப் சேனல் பேட்டி எடுத்தது.

இப்படியொரு நிலையில் பல்வேறு நபர்களும் சார்பட்டா வசனங்களை ரீ கிரியேட் செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்ஸாக செய்து வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த செண்டிமெண்ட் வில்லன் சார்பட்டா படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட டான்சிங் ரோஸ் காட்சியை ரீ – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement