பொதுவாகவே ஹாலிவுட் படங்களைப் பார்த்து பூரிப்படைந்து போய் இயக்குனர்கள் தமிழில் ரீமேக் செய்வது தான் வழக்கம். ஆனால், தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றை சீன மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இது உண்மையிலேயே அதிசயமான நிகழ்வாக உள்ளது. மேலும், கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம் படத்தை தான் சீன மொழியில் ரீமேக் செய்து உள்ளார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் –மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகிய படம் “த்ரிஷ்யம்”. இந்த படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும், இந்த படம் கேரளாவில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. பின் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள்.
தமிழில் ஜீத்து ஜோசப்பே இந்த படத்தை இயக்கி உள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன், கௌதமி, கலாபவன் மணி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக கமலஹாசன் நடித்து உள்ளார். அவருடைய மூத்த மகள் பாலியல் வன்கொடுமைகள் செய்ய முயலும் ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியின் மகனிடம் சிக்கி கொள்கிறார். பின் தன் மகளை காப்பாற்ற கௌதமி போலீஸ் அதிகாரியின் மகனை கொலை செய்து விடுகிறார். அதை மறைத்து, போலீஸ் பிடியில் சிக்காமல் தனது குடும்பத்தை கமலஹாசன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. தமிழிலும் இந்தப் படம் மிக பெரிய அளவு சாதனை படைத்தது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்–மீனா நடிப்பில் ரீமேக் செய்தார்கள். பின் ஹிந்தியில் அஜய் தேவ்கன்– ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்தார்கள். கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பில் ரீமேக் செய்தார்கள். இப்படி ஒட்டு மொத்த இந்திய சினிமாவில் பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்தார்கள். அதோடு இந்த படம் பல மொழிகளில் ஒரு கலக்கு கலக்கியது. அனைத்து மொழியிலும் இந்த பாபநாசம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த பாபநாசம் படத்தை சீன மொழியில் “எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு” என்ற பெயரில் எடுத்து உள்ளனர்.
இந்த படத்தில் சீன நடிகர்களான யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்தப் படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான படம் ஆக இருந்தாலும் இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பின் மூலம் தான் இந்த அளவிற்கு புகழை பெற்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள், ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சீன மொழியில் இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறி வருகிறார்கள்.