கேப்டனுக்கு என்ன ஆச்சு? என்ன சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார் – விலகியது மர்மம் !

0
5955

2011ல் சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக உருமாறி சட்டசபையில் சிங்கமாக மறந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து கர்ஜித்தவர் கேப்டன் விஜயகாந்த். அதன் பின்னர் அரசியலில் ஆக்டிவாக இருந்தாலும் அவரது உடலிலும் பேச்சிலும் மாற்றம் தெரிந்து வந்தது.
சட்ட சபையில் சிங்கமாக கர்ஜித்த கேப்டனின் மேடை பேச்சுக்கள் இதனால் மீம்சுகளாக மாறின. சமீபத்தில் கூட அவர் ஒரு மேடையில் பேசும் போது எனக்கு நான் என்ன பேசுறேன் என எனக்கே தெரியவில்லை என மேடையிலேயே ஒரு கலக்கமாக கூறி தொண்டர்களின் மத்தியில் பயத்தை ஏற்படுத்தினார். அதனையும் கலாய்த்து சிரித்தது இரு கூட்டம்.

ஆனால், இத்தனைக்கும் காரணம் அவரது உடல் நிலை சரியில்லாதது தான். அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தாலும், என்ன சிகிச்சை என்பதை வெளிப்படையாக தேதிமுக கூறவில்லை.

இந்த வருட மார்ச் மாதம், திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜயகாந்த். அவருக்கு சிறுநீரகத்தில் ரத்தம் செல்வது தடைபட்டது என பலர் டிடெக்ட்டிவ் வேலை செய்து பல மீடியாக்களில் வெளியிட்டனர். ஆனால், தேதிமுகவோ இதுஒரு வழக்கமான மருத்துவ செக்அப் தான் என அறிக்கை விட்டனர்.
தற்போது அதே அலை மீண்டும், அடித்துள்ளது. சென்ற வாரம் கேப்டன் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் நடக்க கூட முடியாமல் சற்று பரிதாபமாக வீல் சேரில் வைத்து தள்ளி சென்ற படம் வெளியானது. இதனைப் பார்த்து பலரும், மீண்டும் அந்த கேள்வியை எழுப்ப ஆரம்பித்தனர். கேப்டனுக்கு என்ன ஆச்சு?

தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. முன்னர் சிறுநீரகத்தில் கோளாறு இருந்து போல் தற்போது அவரது உடலில் சில பிரச்சனைகள் வந்துள்ளது. அவருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. கண்களில் இருந்து நீரும் வடிந்து கொண்டே இருக்கிறது. தைராய்டு பிரச்சினை காரணமாக அவரது கழுத்து பகுதி வீக்கமாகவே காணப்படும்.
இதன் காரணமாக தான், ஜெயலலிதாவை எதிர்த்து குரலை எழுப்பிய கேப்டனுக்கு தற்போது சரியாக அவரது குரலில் கூட பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் அவர் சீக்கிரம் பூரண குணமடைந்து மீண்டும் சட்டசபையில் கர்ஜிப்பார் என நம்புவோம். அவருக்கு உடல் நலம் குணமடைய பிரரதிப்போம்.