என்னது, VJ சித்ராவுக்கு கல்யாணமே ஆகலையா ? ஹேம்நாத் குறித்து பகிர் தகவலை சொன்ன முன்னாள் போலீஸ் அதிகாரி. வீடியோ இதோ.

0
768
hemnath
- Advertisement -

விஜே சித்ராவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று திடுக்கிடும் புதிய அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

சித்ரா மரணம்:

இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது.

ஹேமநாத் அளித்த பேட்டி:

எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனை அடுத்து சித்ராவின் அம்மாவிடம் இது தொடர்பாக பேட்டி எடுக்கப்பட்டு இருந்தது. அதில் அவர், அரசியல்வாதியின் மகன் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்று ஹேம்நாத் அளித்திருந்த பேட்டி நம்ப முடியாத ஒன்று. இப்போது தப்பிப்பதற்காக தான் இந்த மாதிரி தேவையில்லாமல் ஹேம்நாத் செய்கிறார். அரசியல்வாதிகள் தான் காரணம் என்று கூறுவது கேஸை திசை திருப்பும் நோக்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

சித்ரா அம்மா அளித்த பேட்டி:

இன்னும் சித்ராவின் மரணத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். என் மகளை முழுக்க முழுக்க அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கிறார்கள். இதற்கு ஹேம்நாத் தான் காரணம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சித்ராவிற்கு கல்யாணம் ஆகவில்லை என்றும், ஹேம்நாத் பொய் சொல்கிறார் என்றும் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் என்பவர் சித்ரா வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

Vj Chitra Suicide Issue Her Husband Hemnath Arrested

காவல்துறை அதிகாரி வரதராஜன் அளித்த பேட்டி:

ஹேம்நாத் சூளைமேட்டில் ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்ததாக கூறி திருமணத்தை பதிவு செய்ததாக கூறி இருந்தார். ஆனால், சூளைமேட்டில் அப்படி ஒரு ஓட்டல் இல்லை. ஐந்து மாதங்களுக்கு முன்பே சித்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்கள். ஆனால், காவல்துறையினர் ஹேம்நாத்துடன் சேர்ந்துகொண்டு தகவல்களை மறைக்கிறார்கள். சித்ரா மரணம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் வெளி வராமலேயே இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்து இருக்கும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement