4 வருடங்களுக்கு பின் சீரியலில் ரீ – என்ட்ரி. செம்பருத்தி சீரியலில் நடிக்க சம்மதிக்க காரணம் என்ன ? நிஷா சொன்ன தகவல்.

0
387
nisha
- Advertisement -

சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லத்தரிசிகளிடயே பிரபலமாகி இருந்தார். இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளியான தான் இருந்தார். பிறகு தான் நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, தலையனை பூக்கள், மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் நிஷா படங்களில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட்டின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-

நிஷா- கனேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் இருக்கிறாள். கடைசியாக இவர் 2020ம் ஆண்டு திருமகள் என்ற தொடரில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தார். அதன் பின் நிஷா கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து நிஷா விலகி விட்டார். இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் MY3 வெப் சீரிஸில் நிஷா நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலின் மூலம் நடிகை நிஷா மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : அக்ஷரா-வருணுக்கு திருமணமா? வைரலாகும் வீடியோவால் குழம்பிய ரசிகர்கள். நீங்களே பாருங்க.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

இந்த சீரியல் ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்று வருகிறது. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவல் என்று சொல்லலாம்.

செம்பருத்தி சீரியல் நடிகர்கள்:

அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். தற்போது தொகுப்பாளர் அக்னி, ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. இடையில் கொஞ்சம் டல்லாக சென்றாலும் தற்போது சீரியல் சூடு பிடித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நிசா கணேஷ் வக்கீலாக நடிக்கிறார். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் நடிப்பது குறித்து நடிகை நிஷா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

ரீ-என்ட்ரி கொடுத்த நிசா கணேஷ்:

அதில் அவர் கூறியிருப்பது, செம்பருத்தி சீரியலில் வக்கீலாக ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கிறேன். சீரியலில் முழுநேரம் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால், இது கொஞ்ச நாள் சூட்டிங் என்பதனால் தான் ஓகே சொல்லிவிட்டேன். இது தவிர இந்த தொடரை மஞ்சுநாதன் சார் டைரக்ட் பண்ணிட்டு இருக்காரு. பல வெற்றி தொடர்களை கொடுத்த இயக்குனர். இதுவரை நான் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. என் மாமனார் வக்கீல். கணேஷ் குடும்பத்தில் 3 பேர் வக்கீலாக இருக்கிறார்கள். என் மாமனாருக்கு நான் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதும் பயங்கர ஹாப்பி. அவர் இப்ப ரிடையர் ஆகிவிட்டார். ஆனாலும், வீட்டில் சட்ட புத்தகங்கள் நிறைய வைத்திருக்கிறார். அதெல்லாம் பார்த்திருக்கிறேன்.

This image has an empty alt attribute; its file name is 3-2-1015x1024.jpg

நிஷா அளித்த பேட்டி:

என்னை பொறுத்தவரை சின்னவேலை, பெரியவேலை என்பதெல்லாம் கிடையாது. எனக்கு எந்த கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் நடிப்பேன். இதுவரை நான் ட்ரை பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மையாகவே எனக்கு ஜாலியாக இருக்கு. இந்த கதாபாத்திரத்திற்கு தலையணை பூக்கள் சீரியல் லுக் வேணும்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் காஸ்டியூம், ஜூவல்லரி எல்லாமே அந்த சீரியலில் எனக்கு பண்ணிக் கொடுத்தவங்க தான் இந்த கதாபாத்திரத்திற்கும் பண்றாங்க. என்னைவிட அவங்க தான் பழைய நினைவுகளை ரீ கிரேட் பண்றதில் பயங்கர எக்சைட்மென்ட் ஆக இருக்கிறாங்க. ஆனால், தலையணை பூக்கள் தொடரில் என் பெயர் வேதவல்லி. இதில் நான் கீதா சுப்பிரமணியம். அதுதான் வித்தியாசம் என்று கூறியிருந்தார்.

Advertisement