சீனா ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் சர்ச்சையான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 1600 கோடி முதலீடு. விளக்கம் அளித்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

0
1504
- Advertisement -

தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்தது தவறான தகவல் என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.  1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் புதிய தொழிற்சாலை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடங்குள்ளது. அதற்க்கான கையெப்பம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர்  யங் லியு முன்னிலையிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தொழிற்சாலையின் மூலம் 6000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-விளம்பரம்-

தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திங்கள் அன்று தனது டிவீட்  செய்திருந்தார். இந்த நிறுவனத்தை கூறித்து பேசிய தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் விரிவாக்கம் செய்வதும், உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தமிழகத்தையே தேர்வு செய்கிறது. இது மாநிலத்திற்கு மிகப் பெரிய சாதனையாக என்று அவர் கூறியிருந்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே சென்னையில் உள்ள நிலையில் மற்றொரு நிறுவனம் வேறு இடத்தில் அமையும் என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

சீனாவின் ஊடகங்களின் செய்தியால் சர்ச்சை:

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமையுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 1600 கோடி முதலீடு செய்யபோவதாக வந்த தகவல்கள் அனைத்தும் பொய்யென சீனாவின் செய்தி நிறுவனமான Securities Times செய்திதாளில் மேற்கோள் காட்டி செய்திகளை வெளியிட்டன. அந்த செய்திகளில் Foxconn Industrial Internet நிறுவனம் தமிழகத்தில் எந்த ஒரு முதலீடும் செய்யவில்லை என்றும் அது அனைத்தும் தவறான தகவல் என்றும் அந்த செய்தியில் கூறிப்பிட்டு இருந்தது.

அதன் பிறகு இந்தியாவில் முழுவதும் உள்ள ஃபாக்ஸ்கான் முதலீடு தொடர்பான தகவல்களை அந்த நிறுவனம் மறுப்பதாக செய்திகள் வெளியாயின. அதன் பின்னர் இந்த 1600கோடி ரூபாய் முதலீடு கூறித்து சந்தேகம் எழுந்தது.

-விளம்பரம்-

அமைச்சரின் விளக்கம்:

இது கூறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர் .பி. ராஜா தரப்பிடம்  இது தொடர்பான  செய்திகள் தவறாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்கள். மேலும் கூறுகையில்  “தமிழ்நாட்டில் முதலீட்டு செய்ய வந்த நிறுவனம் Hon Hai Technology Group (FOXCONN) என்ற நிறுவனம்.

ஆனால், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள், Foxconn Industrial Internet (FII) நிறுவனம் என்றும் கூறிப்பிட்டு இருந்தனர் . இதையடுத்தே FII நிறுவனம், இதுபோல எந்த ஒரு முதலீட்டையும் செய்யவில்லை என மறுத்தன.           

Advertisement