என் அம்மா தடுத்தும் அடம் பிடித்து விஜய்யுடன் நடித்தேன். பிரண்ட்ஸ் பட நடிகை பேட்டி.

0
21233
friends

தமிழ் சினிமா திரை உலகில் முடி சூடா மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்களை தெறிக்கவிட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 64வது படம் மாஸ்டர். இந்த படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த மாஸ்டர் படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை அபிநயஸ்ரீ அவர்கள் அடம் பிடித்து விஜய் படத்தில் நடித்துள்ளாராம். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : சால்ட் அன் பெப்பர் லுக். கண்ணுல கூலிங் கிளாஸ். லீக்கான வலிமை படத்தின் சண்டை காட்சி.

- Advertisement -

80, 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியிலும், குணச்சித்திர வேடத்திலும், படங்களில் கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை அனுராதா. இவருடைய மகள் தான் நடிகை அபிநயஸ்ரீ. நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழில் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் நடித்து உள்ளார். இந்நிலையில் இயக்குனர் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் சூர்யா, விஜய் இணைந்து நடித்த படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில் நடிகை தேவயானியின் சகோதரியாக நடிகை அபிநயஸ்ரீ நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிகை அபிநயஸ்ரீ அவர்கள் விஜய்யை ஒருதலை காதல் செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு 13 வயது தான் ஆகியிருந்தது. இது குறித்து சமீபத்தில் இவர் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது எனக்கு 13 வயது தான் ஆனது. அதனால் என்னுடைய அம்மா அனுராதா அவர்கள் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார்கள். நான் அடம் பிடித்து தான் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement