இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்த படத்தின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ், அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு உதய குமார் இசையமைத்துள்ளார் மற்றும் சாந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை வாங்க போய் பார்க்கலாம்..
கதைக்களம்:
ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் அனைவரும் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரு பெண் சேருகிறார். அவர் வேற யாரும் இல்லைங்க கதாநாயகி லாஸ்லியா தான். பின் கல்லூரி சேர்ந்த சில நாட்களில் ஹர்பஜன் சிங்,சதீஸ் ஆகியோருடன் நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் லாஸ்லியா இறந்து விட்டார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது.
இதனால் வருத்தமடைந்த நண்பர்கள் லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இறுதியில் லாஸ்லியாவின் ஆசை நிறைவேறியதா? அதை தன்னுடைய நண்பர்கள் நிறைவேற்றினார்களா? எப்படி லாஸ்லியா இறந்தார்? என்பதே படத்தின் மீதி கதை. கதாநாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங் படம் முழுக்க வசனம், பஞ்சு அதிகமாக இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனம், ஆக்ஷன் என நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
வழக்கம் போல் சதீஸ் தன்னுடைய நடிப்பை கனகச்சிதமாக நடித்து உள்ளார். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகளில் சதீஷ் அற்புதமாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா தன்னுடைய சுட்டித்தனமான, இளமை துள்ளலுடன் வழக்கம்போல் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார். படத்தில் கடைசியில் நம்மளுடைய ஆக்சன் கிங் அர்ஜுன் வந்திருந்தாலும் வேற லெவல்ல தூள் கிளப்பி இருப்பார். வில்லனாக ஜே.எஸ்.கே.சதீஷ் படத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.
இந்த படம் முழுக்க முழுக்க நட்பை மையமாக வைத்து இயக்குனர் இயக்கி இருக்கிறார். நட்பை வெளிப்படுத்தும் விதமாக அழுத்தமான காட்சிகள் படத்தில் இல்லாததால் கதை அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக செல்லாமல் மேலோட்டமாக தான் சென்றது என்று சொல்லலாம். படத்தில் கிரிக்கெட் காட்சிகள் எல்லாம் கிராபிக்ஸ் இல்லாமல் நேரடியாக எடுத்து இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியது வாழ்த்த கூடிய விஷயமாக இருந்தது.
பிளஸ்:
,இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கனகச்சிதமாக நடித்துள்ளார்கள்.
மைனஸ்:
நட்பை மையமாக கொண்ட படம் என்பதால் அதை ஆழமான, அழுத்தமான காட்சிகள் இருந்திருந்தால் படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
திரைக்கதை பெரியதாக சொல்லும் அளவிற்கு இல்லை.
மொத்தத்தில் ‘பிரெண்ட்ஷிப்’ படம் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும்.