தனி விமானம், அழகு சாதன கம்பெனி, தயாரிப்பு நிறுவனம் – நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?

0
1061
Nayanthara
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

மேலும், நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல், O2, காட்ஃபாதர்,கோல்ட் படம் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து கடைசியாக நயன் நடிப்பில் வெளியான படம் கனெக்ட். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நயன் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஷாருக்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

- Advertisement -

நயன் நடிக்கும் படங்கள்:

இதுதான் நயன்தாராவின் முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நயன்தாரா கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நயன் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்.

நயன்தாரா சொத்து மதிப்பு:

நயன்தாரா அவர்கள் ஒரு படத்திற்கு ஐந்து முதல் பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா திகழ்கிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் சொத்து விவரம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, நயன்தாரா அவர்கள் பல கோடிகளில் ஆடம்பர சொத்துகளை வைத்திருக்கிறார். மொத்தமாக சேர்த்து பார்த்தால் 200 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

நயன்தாரா ஜெட் விமானம்:

அது மட்டும் இல்லாமல் இவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல இருப்பதால் இவர் தனியாகவே ஜெட் விமானம் ஒன்றை வைத்து இருக்கிறார். சொல்ல போனால், தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவிடம் தான் இந்த மாதிரி தனியார் ஜெட் விமானம் இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன்னுடைய குடும்பத்துடன் செலவிட நயன்தாரா சென்னையில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி இருக்கிறார். இது தவிர கேரளா, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நயன்தாராவுக்கு சொந்தமாக பங்களா இருக்கிறது.

நயன்தாரா கார்கள்:

மேலும், இவர் BMW, Benz போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். இவரிடம் BMW 5s சீரிஸ் இருக்கிறது. ஒரு Mercedes GLS 350 D, ஃபோர்டு எண்டெவர், ஒரு BMW 7 சீரிஸ், இன்னோவா கிரிஸ்ட்டா. இவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மட்டுமே ஐந்து கோடி என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் லிப் பாம் கம்பெனியை துவங்கியிருக்கிறார். தற்போது அழகு சாதன பொருட்கள் வரிசையில் இந்த நிறுவனம் மிகப் பிரபலமான நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இது தவிர chai wala என்ற நிறுவனத்திலும் நயன்தாரா சிறு பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது. பின் இவரின் தயாரிப்பு கம்பெனியின் மதிப்பு மட்டுமே 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement