ஹாலிவுட் படத்தில் ஜி வி பிரகாஷ்.! யாருடைய படத்தில் தெரியுமா.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
672
g-v-prakash

தமிழ் சினிமா திரைப்பட உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் பணிபுரிந்து தற்போது பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக இருப்பவர் ஜி.வி. பிரகாஷ். தற்போது ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெற்றிகரமாகவும், அதிக வசூலையும் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நிறைய படங்கள் இந்த வருடம் வெளியே வரப் போகின்றது என தகவலும் வந்துள்ளன.மேலும், அந்த படங்களில் அவரே இசையமைத்து பாடல் பாடி உள்ளார் என்றும் தெரியவருகிறது.

Image result for g v prakash

இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அவர்கள் ஹாலிவுட்டில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது குறித்து ஜீ.வி.பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தினை ரிக்கி ப்ரூசெல் (Ricky brucell ) என்பவர் இயக்குகிறார். மேலும், கைபா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் டெல்லி கணேசன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளன.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலை பங்கமாக கலாய்த்த கமலுடன் நடித்த நடிகர்.!

- Advertisement -

இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வரவிருக்கும் ஹாலிவுட் படம் குறித்து ரசிகர்களிடையே ஆரவாரமும், பல கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன.அது படம் எப்படி? இருக்கும், ஹாலிவுட் போல் திரில்லிங்காகவும், ஆக்சன் சீனாவும் இருக்க போகிறதா? இல்ல நம்ம ஊர் ஸ்டைலில் இருக்குமா? என பல கேள்விகள் இணையங்களில் எழுந்து கொண்டு வருகின்றன. ஜி.வி. பிரகாஷ் படம் என்றாலே காமெடியும், கெமிஸ்ட்ரிக்கும் அளவே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இந்த ட்ராப் சிட்டி படமும் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Image result for trap city

ஜிவி பிரகாஷ் திரைப்பட இசையமைப்பாளர் என்று ஒரு பக்கம் இருந்தாலும், இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன்முதலாக வெயில் படத்தில் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.மேலும், இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அதுவும் ,இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய சூப்பர் ஹிட் படங்கள் மூலம் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் ஆயிற்று . அதுமட்டுமில்லாமல் 2019,2020 ஆண்டுகளில் ஜி.வி.நடிப்பில் நிறைய படங்கள் திரையுலகிற்கு வரப்போகிறது என்று பேசப்பட்டு வருகிறது.