தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் பிரபலமான இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.

இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் நடித்திருந்தார். பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதற்கிடையில் இவர் மக்களின் சில படங்களில் உதவி இயக்குனராகம் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
யூத் படம்:
இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் மூலம் பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

கானா பாடகர் தினேஷ் பேட்டி:
அதோடு படம் வெளியான முதல் நாளிலிருந்து வசூலில் பட்டைய கிளப்புகிறது. இதுவரை இந்த படம் 30 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் கானா பாடகர் தினேஷ் இந்த படத்திற்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதாவது கானா பாடகர் தினேஷ், யூத் படத்தில் இடம்பெற்றுள்ள ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா இந்த பாடல் என்னுடையது.
https://www.youtube.com/watch?v=ns2kCHYA4Ms
படத்தின் மீது புகார்:
இந்த பாடலை நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாடி இருந்தேன். அது ரொம்பவே பிரபலமாகி இருந்தது. ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த பாடலை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் நான் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். இதற்கான உரிமை எனக்கு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து யூத் படக்குழுவினர் தரப்பில் என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






