உண்மையில் யார் அந்த சொப்பன சுந்தரி – ரகசியத்தை உடைத்த கங்கை அமரன்.

0
2587
soppana
- Advertisement -

என்னென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் “கரகாட்டக்காரன்”. இந்த படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் அனுபவங்களை கங்கை அமரன் அவர்கள் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியது, இன்றைக்கும் கரகாட்டக்காரன் படத்தை எங்கு பார்த்தாலும் எனக்கு நிறையபேர் போன் செய்கிறார்கள். பல வருடங்கள் கடந்தாலும் இன்றைக்கும் அந்தப் படம் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையவது இந்த படத்தை டிவியில் போட்டாலும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம்.

-விளம்பரம்-

முதலில் இந்த படம் குறித்து தவறான விமர்சனங்கள் வந்தாலும் நாட்கள் செல்ல ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினி, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்கள். எப்போதும் கரகாட்டகாரர்கள் கேலியும் கிண்டலும் நக்கலும் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

அதையெல்லாம் வைத்துக் கொண்டு பண்ணியது தான் ‘கரகாட்டக்காரன்’ படம். அதோடு அந்த சமயத்தில் கிராமத்து ஆள் என்றால் அது ராமராஜன் தான். அதனால் தான் அவர் நாயகன் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டோம். கவுண்டமணி – செந்தில் பற்றி சொல்லணும். இந்த படத்தில் கவுண்டமணி – செந்தில் வாழைப்பழம் காமெடி அட்ராசிட்டி. இன்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. மேலும், சொப்பனசுந்தரி என்ற படம் அந்தக் காலத்துல வந்துருந்துச்சு. அது ஐம்பதுகளில் வந்த படம். சும்மா விளையாட்டாக பேசியது வேற லெவல் ஹிட். பேசிட்டிருந்தோம்.

அப்பதான் இந்த சொப்பனசுந்தரி கிடைச்சிச்சு. முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு அந்தக் காமெடி இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்லை. அதுமட்டும் இல்லாமல் கரகாட்டக்காரன் படமே இந்த அளவுக்கு ஓடும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. கரகாட்டக்காரன் படத்தின் 30ம் ஆண்டிற்காக கடந்த வருடம் கங்கை அமரன் அளித்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement