என் பியோபிக்கில் துல்கர் பொருத்தமாக இருப்பார் – இந்திய அணியின் அதிரடி வீரர் விருப்பம்.

0
1957
dulquer
- Advertisement -

சமீப காலமாகவே இந்தியா சினிமாவில் பயோபிக் படங்கள் எடுப்பது ட்ரெண்ட்டிங் ஆக உள்ளது. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. பல வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பயோபிக் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இயக்குனர்களும் விளையாட்டு வீரர்களின் கதையை ஆர்வமாக எடுத்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் உருவாகுவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உங்கள் வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுரேஷ் ரெய்னா அதிரடியாக பதில் அளித்து உள்ளார். தற்போது அந்த ட்விட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்படுவதாக பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் ரெய்னா அவர்கள் மலையாள நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இருவரில் யாராவது ஒருவர் தன்னுடைய கதையில் நடித்தால் நன்றாக இருக்கும்.

இவர்களில் யார் என்று யார் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். துல்கர் சல்மான் பாலிவுட்டில் தி ஜோயா பாக்டர் என்ற படத்தில் கிரிக்கெட் அணி கேப்டனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு முக்கிய வீரர் என்பதால் தமிழ்நாட்டில் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement