‘தலைவர்னா யாரு’ கெளதம் மேனனின் பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து வரும் ரசிகர்கள்.

0
1857
Rajini
- Advertisement -

தலைவர் என்றால் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் கெளதம் மேனன் அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-

ந்த படம் இந்த மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

அதோடு ஏற்கனவே கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.அப்போதே இது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பிடித்துவிட்டார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள். இதற்கு சில பிரபலங்கள் ஆதரவு கொடுத்தும், சில பிரபலங்கள் எதிர்த்தும் பேசியும் இருந்தார்கள்.

தற்போது எந்த சினிமா பிரபலங்களை பார்த்தாலும் அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி ‘சூப்பர் ஸ்டார் யார்’ என்பது தான். இந்த கேள்விக்கு பல பிரபலங்கள் பதில் அளித்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் பலர் ரஜினியை கேலி செய்யும் விதமாக பழைய வீடியோக்களை எல்லாம் தோண்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி குறித்த கேள்விக்கு இயக்குனர் கெளதம் மேனன் அளித்த பதிலின் வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கெளதம் மேனன் பேசிக்கொண்டு இருக்கும் போது தற்போது தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவிற்காகவும் அவர் ஒரு லெவலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் தான் எல்லாரும் கதை எழுதுகிறார்கள் என்று கௌதம் மேனன் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டி எடுத்துக் கொண்டிருந்த அபிஷேக் அப்போது நீங்கள் தலைவருக்கு பண்ண போகும் படமும் அப்படித்தானா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சில நொடிகள் மௌனமாக இருந்த கௌதம் மேனன் ‘தலைவர்ணா யாரு’ என்று கேலியாக கேட்டிருக்கிறார்.

இயக்குனர் கெளதம் மேனன், உலக நாயகன் கமல் அவர்களின் தீவிர ரசிகர் என்பது தெரியும். கமலை வைத்து இவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதே போல விஜய்யை வைத்து ‘யோஹன் அத்யாயம் ஒன்று’ என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். இந்த படத்தின் அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement