தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் துணை நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடித்த தாராள பிரபு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், நடிகர் விவேக்கின் மறைவு தமிழக மக்களின் மனதில் மீளா துயரத்தை தந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் விவேக் பற்றி உருக்கமான பதிவை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகர் விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக விவேக் பணி புரிந்திருந்து இருக்கிறார். தற்போது இந்நிகழ்வை பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய நினைவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : என்னது ஷிவானிக்கு தனி கேரவனா ? விக்ரம் செட்டில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரின் சந்தேகத்தை தீர்த்த ஷிவானி.
அந்த வகையில் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் பற்றி கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, டிஜிட்டல் வெளியீடாக விவேக்குடன் ஒரு படம் திட்டமிட்டிருந்தேன். அவரது முதல் ஓடிடி நிகழ்ச்சியான ‘எங்க சிரி பார்ப்போம்’ நிகழ்ச்சி வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். அதுதான் எங்கள் கடைசி உரையாடல்
அவரது முதல் ஓடிடி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். என்ன ஒரு உற்சாகமான நிகழ்ச்சி. சொக்கு, ரிவால்வர் ரிச்சர்ட் இரண்டு கதாபாத்திரங்களின் நினைவுகளுடன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது கௌதம் மேனன் அவர்கள் சிலம்பரசனை வைத்து வெந்து தனிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.