நேசமணிக்கு எதிராக பேசிய பிக் பாஸ் காயத்ரி.! வாய் கொடுத்து வம்பில் மாட்டிய தருணம்.!

0
852
Nesamani-gayathri
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்குபெற்று ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம். பாஜகவை சேர்ந்த இவர் அந்தக் கட்சியைப் பற்றி யாரேனும் தவறாக பேசினால் மூக்கை நுழைத்துக் கொண்டு வாதத்திற்கும் வந்துவிடுவார்

-விளம்பரம்-

பா ஜ க கட்சியின் தீவிர தொண்டராகவும் மோடியின் தீவிர விஸ்வாசியாகவும் இருந்து வந்தார் காயத்ரீ. ஆனால், சமீபத்தில் இவர் பாஜக கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வடிவேலுவின் #prayfornesamani என்ற ஹேர் ஸ்டைல் கேலி செய்து காயத்ரி வெற்றிவேல் பதிவு செய்திருந்தார்.

இதையும் பாருங்க : விஜய்க்கே நான்காவது இடம்.! அஜித்துக்கு? தமன்னாவின் பேவரைட் லிஸ்ட்.!

- Advertisement -

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போது உள்ள நிலையில் மக்களை கண்டால் மிகவும் எனக்கு பைத்தியக்காரத்தனமாக மாறியுள்ளார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஒரு சிறந்த காமெடி காட்சியை பயன்படுத்தி தேவையில்லாமல் அதற்கு ஹேர் டேக்கை உருவாக்கி அதனை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதுபோன்ற முட்டாள்கள் அனைவரும் வெட்டியாக தான் இருப்பார்கள் அவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், நீங்கள் மோடிக்கு எதிராக செய்ய நினைப்பது மிகவும் முட்டாள்தனமான ஐடியாவாக தான் உள்ளது. இதுபோன்ற முட்டாள்கள் எங்களை வீழ்த்த முடியாது. அத்தனை மக்களும் எங்களுக்கு அறிவு இல்லை என்று நினைக்கிறார்களா என்று கடுமையாக ட்வீட் செய்திருந்தார். இந்த டீவீட்டை கண்ட பலரும் காயத்ரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement