அதுக்கும் எனக்கும் ராசியே இல்ல, வைரலாக மீம் குறித்து ஜாலியாக காயத்திரி போட்ட கமன்ட். என்ன மனசுயா.

0
318
gayathri
- Advertisement -

விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு இந்த பாடல் எந்த படம்? யாருடைய பாடல்? என்று ரசிகர்கள் தேடி கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பலரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் பகத் பாஸில் மனைவியாக காயத்ரி நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘அவர சுட்டு கொன்றது மாதிரி கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள்’ – சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

- Advertisement -

காயத்ரியும் – கணவரும் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காயத்ரி நடித்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரத்தை கேலி செய்து மீம் ஒன்று வைரலானது. அதில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் திருமணத்தில் தன் கணவர் தன்னை மறந்துவிட்டார் என்பதே அவருக்கு தெரியவில்லை. சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன் கணவர் பெண்ணாக மாறியதும் அவருக்கு தெரியவில்லை. விக்ரம் படத்தில் தன் கணவர் என்ன வேலை செய்கிறார் என்றும் அவருக்கு தெரியவில்லை என்று கேலியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த காயத்ரி ‘கணவருக்கும் எனக்கும் ராசியே இல்லை’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

‘மேலும், இந்த படத்தில் நடித்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் காயத்ரி. விக்ரம் எனக்கு எந்த அளவிற்கு முக்கியமான படம் என்பதாய் வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த 3 தினங்களாக உங்களின் அன்பு மற்றும் பாராட்டுக்களால் மூழ்கி இருக்கிறேன்.கமல் சார் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது, கனவு நனவான தருணம் (என்னை யாரவது கிள்ளுங்க). அதுவும் பகத் பாசிலுடன் நடித்து இருப்பது (அவரும் அவருடைய கண்ணும்). என்னை நம்பியதற்கு நன்றி லோகேஷ். இந்த வாய்ப்பளித்த கமல் சார் மற்றும் மகேந்திரன் சாருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சினிமாவிற்கு வந்து 10 ஆண்டு ஆகிவிட்டது :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய காயத்ரி இவ்வளவு பெரிய படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை .சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா தான் என்னை சினிமா உலகிற்கு அழைத்து வந்தார். கமல் சாருடன் இணைந்து நடிக்க ரொம்பவும் ஆசைப்பட்டேன். ஆனால், அது நடப்பதற்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

gayathri

லோகேஷ் சொன்னது:

பகத் பாசில் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்த படத்தில் அதுவும் நடந்த ஆகிவிட்டது. பகத் பாசிலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னால பண்ண முடியுமா? என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இதை நான் லோகேஷ் கனகராஜ்க்கு மெசேஜ் அனுப்பினேன். ’இதுக்குத்தான ஆசைப்பட்ட, சாவுனு’ லோகேஷ் சொன்னார். படத்தில் வேலை பார்த்த எல்லோரும் டெடிகேட்டிவாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று கூறியிருந்தார்.

Advertisement