கில்லி படம் மீம்ஸ் குறித்து கராத்தே ராஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது.
View this post on Instagram
எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு.
மேலும், இந்த படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் ஆகும். நடிகர் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இந்த படம் அமைந்து இருக்கிறது என்று சொல்லலாம். கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
கில்லி படம்:
சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்து இருக்கிறது. இதனால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள். அந்த வகையில் கில்லி படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் ஏதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
View this post on Instagram
படம் குறித்த தகவல்:
அதோடு படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சில தினங்களில் நிறுத்தி விடுவார்கள். கில்லி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவே இல்லை. குறிப்பாக, இளம் தலைமுறையினர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். மேலும், ரீ ரீலீஸில் கொண்டாடி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு சமூக வலைத்தளத்தில் கடந்த சில வாரங்களாகவே கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது.
கராத்தே ராஜா பேட்டி:
அதோடு இந்த படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர், படக்குழு என அனைவருமே தங்களுடைய அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் கில்லி பட அனுபவம் குறித்து கராத்தே கூறி இருப்பது, கில்லி படத்தில் அர்ஜுனரு வில்லு என்ற பாடலில் விஜய் கையில் செங்கல் உடைக்கும் மாதிரி ஒரு காட்சி வரும். அந்த காட்சி எடுக்க நான் என்னுடைய கராத்தே மாஸ்டரை கூட்டிட்டு வருகிறேன் என்று இயக்குனரிடம் சொன்னேன். அவரும் ஒற்றுக்கொண்டார். பின் ஒரு பக்கம் என்னுடைய கராத்தே மாஸ்டர் உடைத்திருப்பார்.

கில்லி மீம்ஸ் குறித்து சொன்னது:
இன்னொரு பக்கம் வேறொரு நபர் இருப்பார். நான் தூரமாக தான் இருந்தேன். அப்போது விஜய் சார், ராஜாவே உடைக்கட்டும் என்று சொன்னார். அவர் நான் சரியாக உடைப்பேன் என்றும், கராத்தே தெரிந்திருப்பதாலும், என் மீதுள்ள அன்பின் பிரியத்தாலும் உடைக்க சொன்னார். உடனே இயக்குனரும் என் தலையில் ஒரு துணி கட்டி முகம் தெரியாத மாதிரி திரும்பி நிக்க சொல்லி தான் உடைக்க சொன்னார். இருந்தும் கன்னத்தில் இருக்கும் கிரிஜா தான் தெரிந்து விட்டது. இதைப் பார்த்து மீம்ஸ்களை போட்டிருந்தார்கள். அதோடு திரிஷாவும் என்னையும் வைத்து ஒரு கதையே ரெடி பண்ணி இருந்தார்கள். அதை பார்த்து நான் மிரண்டே போய் விட்டேன். அவர்கள் சொன்ன ஒவ்வொரு கதையும் நன்றாக தான் இருந்தது என்று கூறியிருக்கிறார்.






