அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

0
25757
silk-smitha
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் கவர்ச்சி நாயகியாகவும், முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய இயற்பெயர் விஜயலஷ்மி ஆகும். இவர் சினிமா துறையில் 1970களில் ஒப்பனைக் கலைஞராக தான் வாழ்க்கையை தொடங்கினார்.பின் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியின் ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று அழைத்தார்கள். சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சினிமாத்துறையில் பிரபலமாகவும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சில்க் ஸ்மிதா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.மேலும், இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவருடைய படங்கள் வந்தால் போதும் அவரைப் பற்றிப் பேசாதவர்கள் யாருமில்லை. இன்று வரை அவரைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். தற்போது சில்க் ஸ்மிதாவை கண்ணாடியில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி அச்சு அசலாக தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் ரசிகர்கள் இணையங்களில் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் கூட அந்த பெண் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஒரு சில பேர் சில்க் ஸ்மிதாவின் உறவினர்கள் ஆக இருக்குமோ என்றும் கூறிவருகிறார்கள்.

- Advertisement -

சில்க் ஸ்மிதா அவர்கள் இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர். இவர் பிறப்பால் ஆந்திர மாநிலத்தை சார்ந்து இருந்தாலும் இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலுள்ள கரூர் தான். மேலும், வீட்டில் உள்ள வறுமையின் காரணமாக சில்க் ஸ்மிதா தன்னுடைய பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்தி கொண்டார்.இவருடைய வசீகர தோற்றத்தாலும்,கண் அழகாலும் பல பேர் இவருக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள். இதனால் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள் குடும்பத்தார். ஆனால், இவருக்கு குடும்ப வாழ்க்கையில் பல துன்பங்கள் ஏற்பட்டதால் வாழ்கை வெறுத்து பிழைப்பு தேடி சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். பின்னர், சினிமா துறையில் நடிகைகளுக்காக ஒப்பனைக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

Image result for silk smitha
Image

மேலும், வினுசக்கரவர்த்தியின் படமான வண்டிசக்கரம் படத்தின் மூலம்தான் இவர்களுடைய வாழ்க்கையே மாறியது என்று கூட சொல்லாம். . மேலும், இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் ,கவர்ச்சிகரமான தோற்றத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.பின்பு 80, 90களில் இவருடைய நடனம் இல்லாத தமிழ் திரைப் படங்களைப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு சினிமா துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.மேலும், இவர் காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் தற்கொலையும் செய்து கொண்டார்.தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க போகிறார்கள் என தகவல் வெளிவந்தது.

-விளம்பரம்-
Advertisement