பணத்தை திருப்பி கொடுங்க. மேக் மை ட்ரிப்பை வறுத்து எடுத்த விஜே அஞ்சனா.

0
23988
anjana
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி ஜே அஞ்சனா. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சன் மியூசிக் தொலைக்காட்சி பணிபுரிந்து இருக்கிறார். தொகுப்பாளினியாக இருந்த போது இவர் பல படங்களின் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததது. அந்த குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு வி ஜே அஞ்சனா சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், விஜே அஞ்சனா அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

- Advertisement -

இதையும் பாருங்க : வாய் தவறி சொல்லிட அண்ணா. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நடிகை கௌரி கிஷன்.

இந்நிலையில் இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேக் மை ட்ரிப் கம்பெனி குறித்து பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியது, என்னுடைய தோழி லீவ் ஹாலிடே கொண்டாடுவதற்காக மேக் மை ட்ரிப்பில் புக் செய்திருந்தார். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக அவர் அந்த ட்ரிப்பை கேன்சல் பண்ண முடிவு செய்தார்.

-விளம்பரம்-
Image

பின் மேக் மை ட்ரிப்க்கு கால் செய்து எனக்கு தேதியை மாற்றி கொள்ளுங்கள், இல்லை என்றால் என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கூறி உள்ளார். அதற்கு மேக் மை ட்ரிப்காரர்கள் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை மேடம். நீங்கள் டிராவல் பண்ணுங்கள் ஒன்னும் ஆகாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

உடனே அவர் எனக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது என் குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் பொறுத்து எடுக்க முடியுமா என்று அவர் கூறியிருந்தார். பின் மேக் மை ட்ரிப் தேதியை மாற்றி தரவும் இல்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதை அவர் என்னிடம் அவர் சொன்னார். இப்படி பொறுப்பில்லாமல் மேக் மை ட்ரிப் ட்ராவல் நிறுவனம் நடப்பது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம்.

அவளுக்கு இரண்டு வயதில் குழந்தை இருப்பது பற்றிக் கூட கவலைப்படாமல் இப்படி சுயநலத்திற்காக இருக்கிறீர்களே என்று விஜே அஞ்சனா டுவிட்டரில் கருத்தை பதிவு செய்தார். தற்போது இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த ட்விட்டை பார்த்து நெட்டிசன்கள் பலரும் விஜே அஞ்சனாவுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement