வாய் தவறி சொல்லிட அண்ணா. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நடிகை கௌரி கிஷன்.

0
75516
gouri

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

Image

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இருப்பினும் விஜய்யின் சர்ப்ரைஸ் நடனம், குட்டி ஸ்டோரி, விஜய் சேதுபதியின் அரசியல் பஞ்ச் என்று ரசிகர்கள் எதிர் பாராத பல நிகழ்வுகள் நடந்தேறியது. இந்த படத்தில் உள்ள அனைவரும் இளம் நடிகர் நடிகைகள் தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : உண்மையான பிக் பாஸ் சீசன் ஆரம்பிச்சிடுச்சு. காஜல் போட்ட பதிவு ஏன் தெரியுமா ?

அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 96 குட்டி ஜானு புகழ் கௌரி கிஷனை சொல்லலாம். நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷன் என்பவரும் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது நடிகை கௌரி கிஷன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசி இருந்தார். அப்போது நடிகர் சாந்தனு பெயரை குறிப்பிடும் போது சாந்தனு மேம் என்று கூறி விட்டார்.

இது மேடையில் இருந்தவர்கள் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை கௌரி கிஷன், சாந்தனு அண்ணாவ மேம்னு கூப்பிட்டுட்ட, ரொம்ப சாரி அண்ணா. ஆனால், கொஞ்சம் அமைதியா இருங்கபா, என்னோட வாய் தவறி சொல்லிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில் வைத்துள்ளார்.

Advertisement