தமிழ் மரபில் திருமணம் செய்ய வேண்டும் என்று மரத்தை வளர்ந்துள்ள அருண் பாண்டியன் – ஞானசம்பந்தன் கூறிய சுவாரசிய தகவல்.

0
1001
Arunpandian
- Advertisement -

அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் தமிழ் மரபு திருமணம் குறித்து பேராசிரியர் ஞானசம்பந்தன் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ஓ மை கடவுளே.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடித்திருந்த படம் போர் தொழில். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது அசோக் செல்வன் அவர்கள் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தின் சூட்டிங் போதுதான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்களாக கூறப்படுகிறது.

- Advertisement -

அசோக் செல்வன்- கீர்த்தி திருமணம்:

அது மட்டும் இல்லாமல் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லி விட்டார்கள். இன்று காலை அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் திட்டமிட்டபடியே திருநெல்வேலி அருகே சேது அம்மன் பண்ணையில் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவர்களுடைய திருமணம் தமிழர் திருமண மரபு படி நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில் பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான ஞானசம்பந்தன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கூறியது, சமீப காலமாகவே தமிழர் மரபு முறைப்படி திருமணங்களை நடத்த பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழ் மரபு கல்யாணம்:

இதுவரை நானே சுமார் 500 கல்யாணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். தமிழர் மரபு கல்யாணம் என்பது ஒரு கல்யாணத்தின் போது மேடையில் என்ன நடக்கிறது, அதற்கு என்ன அர்த்தம், அந்த கல்யாணத்திற்கு வந்திருப்பவர்களுக்கு எல்லோருக்கும் எளிமையாக புரிகிற மாதிரி இருக்கும். இந்த வகையான கல்யாணம் பஞ்சமுக விளக்கேத்துறதுல இருந்து தொடங்கும். பெண்கள் வந்து விளக்கேற்றிவிட்டு தேவாரம் திருவாசகத்தை பாடுவார்கள். கல்யாணத்தை நடத்தி வைப்பவர் மேடையில் நடப்பதை வர்ணனை செய்வார். அந்த காலத்தில் நிறைய பிள்ளைகளைப் பெற்ற பெண்களை தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைப்பார்கள். அருண் பாண்டியன் வீட்டு கல்யாணத்தை பொருத்தவரைக்கும் இப்படி நடத்தணும் என்று அசோக் செல்வனின் அம்மா என்னை தொடர்பு கொண்டு கேட்டார்கள்.

-விளம்பரம்-

அரச மரம் குறித்த சிறப்பு:

இப்படி ஒரு மரபு கல்யாணம் செய்யணும் என்று இரண்டு வீட்டாரும் பேசி முடிவு செய்தது தான் சிறப்பு.
அதோட அருண்பாண்டியன் வீட்டில் உள்ளவர்கள் பண்ணையிலேயே நடத்தலாம் என்று முடிவு செய்ததுதான் இன்னும் சிறப்பாக இருந்தது. பொதுவாக இந்த மாதிரி கல்யாணங்களில் அரச மர குச்சியை மணமேடைக்கு கொண்டு வந்து அந்த குச்சிக்கு காப்பு கட்டுவாங்க. முற்கால தமிழகத்தில் அரச மரத்தடியில் தான் கல்யாணம் நடத்துவார்கள். இந்த அரச மர கொம்புக்கு பின்னாடி இன்னொரு அடையாளமும் இருக்கிறது. அதாவது அரசர்களை குடிமக்கள் தங்களது வீட்டு கல்யாணத்துக்கு அழைத்ததாகவும் அரசர் தன்னுடைய அடையாளமாக அவர்கள் பயன்படுத்தும் தடி போன்ற ஒரு பொருளை அனுப்பி வைத்ததாகவும் வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கு.

அருண்பாண்டியன் வைத்த மரம்:

அருண்பாண்டியன் பண்ணை வீட்டில் அரசமரமே இருந்தது ரொம்பவே சிறப்பாக இருந்தது. விசாரித்த போது இப்படி ஒரு திருமணத்துக்காகவே அரச மரத்தை நட்டு வளர்த்திருந்ததாக சொன்னார்கள். மணமக்கள் மேடைக்கு வந்ததும் இருவரது தாய் மாமன்களும் வந்து அவர்களுக்கு திருமணத்துக்கான உடைகளை தந்து மணமக்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வது என்று சில சடங்குகள் இருக்கிறது. இந்த சடங்குகள் ஏன் செய்யப்படுவது என்று விளக்கத்தை நான் சொல்லிக் கொண்டே வந்தேன். மணமக்களை 90 வயதை தாண்டிய அருண்பாண்டியனின் தந்தை ஆசீர்வதிக்க திருமணம் சிறப்பாக முடிந்தது என்று மகிழ்ச்சியோடு கூறியிருந்தார்.

Advertisement