‘இது அல்லவா சமூக வலைதளத்தின் பவர்’ ரோட்டில் வாழ்ந்து வரும் இங்கிலிஷ் டீச்சருக்கு நடந்த மேஜிக். தேடி வந்த அந்த நபர்.

0
1056
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் சில விஷயங்கள் வைரலாகவே இருந்து வருகிறது அந்த வகையில் தான் சில நாட்களுக்கு முன்பு இந்த பாட்டி வைரலாகி வந்தார்.  இந்தப் பாட்டி ரங்கூனை சேர்ந்தவர் இவருக்கு மதுரையில் திருமணம் ஆனது. கணவர் உடன் சென்னைக்கு வந்த அவர் கணவர் இறப்பிற்கு பின் சாலையிலே தங்கி அங்கு அமர்ந்து உண்டு வருகிறார். ஒரு யூடுபர் ஒருவர் அந்த பாட்டியிடம் சென்று கேள்விகளை கேட்டபோது தான்  டீச்சர் என்றும் நான் பள்ளிகளில் பாடம் எடுத்து வந்திருக்கின்றேன் என்றும் கூறினார் இது பலரை இந்த வீடியோவானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

பாட்டி கூறியது:

என்னுடைய பெயர் மெர்லின் என்னுடைய சொந்த ஊர் ரங்கூன். எனக்கு மூன்று வயது இருக்கும் போது என்னுடைய தங்கைக்கு இரண்டு வயது இருந்தது அப்பொழுது என்னுடைய அம்மா இறந்து விட்டார். அதன் பின் என்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரு நான்கு குழந்தைகள் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள். அதில் இரண்டு குழந்தைகள் இறந்து விட்டது. அந்த அம்மா ஒரு மாதிரியாகத்தான் இருப்பார் மாற்றந்தாய் என்றாலே அவ்வாறு தான் இருப்பார்.

- Advertisement -

மாற்றாந்தாய் என்றால் மாற்றாந்தாய் தான் அவர்களின் குணம் அப்படித்தான் இருக்கும். ஆனால் அவர் இப்பொழுது உயிருடன் இல்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் 1964 இந்தியாவிற்கு வந்தோம். எனது கணவர் ரங்கூனில் பள்ளியை வைத்து ஆசிரியர் அதில் அவர் பணிபுரிந்து வந்தார். நானும் அங்கு ஆசிரியராகப் பணியாற்றினேன் பின்பு இடைத்தரகர் மூலம் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. காதல் என்று சொன்னால் எங்கள் வீட்டில் எங்கள் அப்பா என்னை பெல்ட்டால் அடிப்பார். சமீபத்தில் ஐந்தாறு வருடங்களுக்கு முன்புதான் நான் இங்கு சென்னைக்கு வந்தேன்.

நான் கணவருடன் இருந்த கிராமத்தில் அங்கு சாப்பாடு உணவு இல்லாத காரணத்தால் நாங்கள் இங்கு வந்தோம். எனக்கு இரண்டு பையனும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்று நான் தனியாக வந்து விட்டேன்.  எனக்கு பர்மிஸ் ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகள் எனக்கு தெரியும் மலையாளம் மொழியை நான் பேசினால் புரிந்து கொள்வேன். சிறிது காலமாகவே நான் சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டம் பட்டினியாகவே இருந்தேன். அதன் பிறகு நானே சமாளித்துக் கொண்டேன். ஏதோ ஒன்று நான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

ஒரு சில மருமகளுக்கு நன்றாக  இருக்கிறார்கள் இன்னும் சில பேர் எப்பொழுதும் மூஞ்சை கோபமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் நான் அவர்களை விட்டு தனியாக வந்து விட்டேன். சில சமயம் உணவு கிடைக்கும் சில சமயம் உணவு கிடைக்காது வாழ்க்கை அப்படியே போகிறது. நான் என் கணவரோடு தான் சென்னைக்கு வந்தேன் நான் வீட்டு வேலைக்காரியாகவும் வேலை செய்து வந்தேன் அதில் வந்த உணவு எனக்கு பற்றவில்லை. என்று அந்தப் பாட்டி அம்மாள் மனம் உருகி பேச வந்தார். அதன் பின் அந்த சில நாட்களில் அவருக்கு தெரிந்த நபர் அந்த பட்டியம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அந்த நபர் குறித்து பாட்டி கூறியது:

நான் அவர்களின் வீட்டின் மேல் வாடகைக்கு இருந்து வந்தோம். அவர்களுக்கு நான் டியுசன் எடுத்து வந்தேன். அவர்கள் என்னை செல்லமாக காமா என்று தான் அழைப்பார்கள் என்றும் அவருக்கு சிறுவயதில் காமா பாட்டியை பார்த்தால் பயம் அடிப்பேன் என்றும் கூறி இருந்தார். மேலும் அந்த பாட்டி கூறுகையில் இவர்கள் தங்கமான குழந்தைகள் என்று கூறி அவரிடம் ஆட்டோவில் ஏறி பாதுகாப்பான ஆதரவர் அற்றோர் விடுதியில் சேர்த்து விட்டு சென்றனர். இது குறித்து பலரும் சமூக வலைதங்களின் சக்தி இது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .        

Advertisement