சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து கோமதி பிரியா விலக இருப்பதாக கூறப்படும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள். இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள். மேலும், சீரியலில் ஹீரோ பிடித்து படிக்காதவர். தன்னுடைய அப்பாவிற்காக எதையும் செய்யக்கூடியவர். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை நடத்தி வருகிறார். எதிர்பாராத விதமாக மீனாவை முத்துவுக்கு திருமணம் செய்து வைக்கிறார் அண்ணாமலை. மீனா வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையே மாறுகிறது.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் பணக்கார பெண் என நினைத்து ரோகினியை தன்னுடைய மூத்த மகன் மனோஜிக்கு விஜயா திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அவர் பொய் சொன்னார் என்று தெரிந்து விட்டது. ரவி பணக்கார பெண் சுருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தினமும் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சீரியல். தற்போது சீரியலில் சீதா, அருண் திருமணத்திற்கு முத்து ஒத்துக் கொள்ளவே இல்லை. மீனா, யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து வைத்தார். பின் முத்து சம்மதத்துடன் சீதா- அருண் கல்யாணம் நடக்கும் சமயத்தில் முத்துவிற்கு உண்மை தெரிந்து மீனா மீது கோபப்பட்டுமீனாவை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பிலேயே சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

கோமதி ப்ரியா குறித்த தகவல்:
மேலும், இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கோமதி ப்ரியா. இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்கு பின் தான் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவர் முதன் முதலாக 2018 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த ‘ஓவியா’ என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வேலைக்காரன்’ தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதன் பின் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார்.

நடிகை விலகல்:
இருந்தாலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த நிலையில் கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலக இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் இனிமேல் ஆலியா மானசா தான் நடிக்கப் போகிறார். கோமதி பிரியா விலகிவிட்டார் என்றெல்லாம் youtube-யில் வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் பலருமே என்னானது? ஏன் கோமதி பிரியா விலகினார்? நல்லா தானே சீரியல் சென்று கொண்டிருக்கின்றது என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

நடிகர் கொடுத்த விளக்கம்:
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கோமதி பிரியா திருமண கோலத்தில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். திருமணத்துக்காக தான் இவர் சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பழனியப்பன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கோமதிப்பிரியா சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலகவில்லை. அதை பற்றி வரும் தகவல்கள் எல்லாமே பொய். கடைசி வரை அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் வருவார். முத்துவாக வெற்றியும், மீனாவாக கோமதி பிரியா தான் நடிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.






