திடீரென சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை நடிகை, ஷாக்கில் ரசிகர்கள்- அவரே சொன்ன காரணம்

0
553
- Advertisement -

திடீரென்று சீரியலை விட்டு சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடர் முத்து-மீனா இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் டாப்பில் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது சீரியலில் மீனா தம்பி சத்யாவின் வீடியோவை முத்து போனிலிருந்து எடுக்க ரோகினி பல திட்டம் போடுகிறார். ஆனால், ஒன்றுமே கை கொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் கொலு விழா நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு விருந்தினர்களை வரவைத்து சிறப்பாக கொலுவை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் கிரிஸ், அவருடைய பாட்டியையும் வீட்டிற்கு முத்து அழைத்து வந்தார். ஆனால், இது விஜயா- ரோகிணிக்கு பிடிக்கவில்லை .

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

பின் ரோகினி வற்புறுதலால் அவர் அம்மா, முத்துவை திட்டிவிட்டு சென்று விடுகிறார். இதனால் முத்து-மீனா மனமடைந்து இருக்கிறார்கள். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கோமதி ப்ரியா. இவருடைய சொந்த ஊர் மதுரை. வேலைக்காக சென்னை வந்தார்.

கோமதி ப்ரியா குறித்த தகவல்:

பின் இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவர் முதன் முதலாக 2018 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த ‘ஓவியா’ என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வேலைக்காரன்’ தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதன் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலை விட்டு விலகிய கோமதி:

இருந்தாலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த நிலையில் கோமதி பிரியா சீரியலை விட்டு விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, மலையாளத்தில் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக் தான் செம்பனீர் பூவே. இதிலும் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியா தான் நடித்து வந்தார். இந்த சீரியலில் மூலம் இவருக்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கோமதி ப்ரியா பதிவு:

தற்போது திடீரென மலையாள தொடரிலிருந்து கோமதி பிரியா விலகி இருக்கிறார். பின் இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், உங்கள் வாழ்க்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்காதீர்கள். அவர்கள் உங்களை காயப்படுத்தலாம், ஆனால் அதை நீங்கள் அனுமதிக்காத வரை அவர்கள் உங்களை அழிக்க முடியாது. உங்கள் தன்னம்பிக்கையை எப்போதுமே விட்டு விடாதீர்கள் என்று பதிவு போட்டிருக்கிறார். இவர் ஏன் அந்த சீரியலை விட்டு விலகினார் என்ற காரணம் தெரியவில்லை. பலருமே சீரியல் டீக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement