குட் பேட் அக்லி வசூல் : சாதனையை முறியடித்ததா? இல்லையா? வசூல் விவரம் இதோ

0
25
- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

- Advertisement -

குட் பேட் அக்லி படம்:

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வரியா நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு அடார் லவ் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் பிரியா வாரியார் இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனார் என்று சொல்லலாம். இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் வசூல்:

இப்படி இருக்கும் நிலையில் குட் பேட் அக்லி படத்தினுடைய வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வெளியாகி முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடிக்கும் அதிகமாக வசூலை செய்தது. இதுவரை படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலக அளவில் இந்த படம் 148.50 கோடி வசூலை செய்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 84 கோடி, இந்தியாவில் 100 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த சாதனையை குட் பேட் அக்லி படைத்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் 200 கோடி வசூலை ஈட்டும் என்று கூறப்படுகிறது.

படத்தின் கதை:

படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால்
அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து
தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க வருகிறார். அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Advertisement