மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவர் தானம். சீக்ரெட் சொன்ன கௌதம்.

0
104977
minnale
- Advertisement -

கௌதம் மேனன் படம் என்றாலே ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷி ஆகி விடுவார்கள். கௌதம் மேனன் அவர்கள் திரைப் படத் துறைக்கு வருவதற்கு முன் பல விளம்பரப் படங்களையும் உருவாக்கி உள்ளார். முதலில் இவர் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவருடைய படத்திற்கு என ஒரு தனி இளைஞர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். அவருடைய படங்கள் எல்லாம் காதல், ரொமான்டிக் என்று இளைஞர்கள் மனதை கொள்ளை அடிக்கும் அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் சினிமாவில் உள்ள மிக பிரபலமான இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவருடைய படத்திற்கு என்று ஒரு கும்பல் எப்போதும் இருக்கும்.

abbas

மேலும், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த படம் குறித்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து உள்ளார். அதோடு இந்த படம் அதிரடி, சண்டை, ஆக்ஷன், காதல், ரொமான்டிக் என கலவையான கமர்ஷியல் படமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அந்த வகையில் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் எல்லாரும் பயங்கர வெக்ஸ் ஆகி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : பையா, பப்பு. கொஞ்சி குலாவிய மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர். வெளியான ஷாக்கிங் ஸ்க்ரீன் ஷாட்.

- Advertisement -

இந்நிலையில் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கவுதம் மேனன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நிகழ்வுகளை குறித்து பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பாக மின்னலே படத்தை குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, மின்னலே படத்தில் முதலில் மாதவன் கதாபாத்திரத்தில் நடிகர் அப்பாசை தான் நடிக்க வைக்க முடிவு செய்து இருந்தோம். மேலும், நடிகர் அப்பாஸ் எனக்காக இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேசினார் என கூறினார். பின்னர் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய் விட்டது. அதற்கு பிறகு தான் மாதவன் அவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தார்களாம்.

Image result for minnale goutham menon

-விளம்பரம்-

2001 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப் படம் தான் “மின்னலே”. இந்த படத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ், விவேக், நாகேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் அப்போது பயங்கர சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் கௌதம் மேனன் அவர்கள் சிறப்பு தோற்றத்திலும் நடித்து உள்ளார். நடிகர் அப்பாஸ் அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். தமிழில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இந்நிலையில் கௌதம் மேனனின் அடுத்த படம் யாரை வைத்து இருக்குமோ?? என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.

Advertisement