வெற்றிமாறன் சொன்னால் மட்டும் செய்வார். ஆனால், எனக்கு மட்டும் வேண்டாம்னு சொல்லிட்டாரு தனுஷ். கௌதம் மேனன் வேதனை.

0
60253
Asuran
- Advertisement -

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் நீண்டகால காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் தான் வெளிவந்தது. அதோடு இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் டீஸர் 2016 ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு பெற்றது. ஆனால், படத்தின் வெளியீடு தான் வருவதற்கு நிறைய தாமதம் ஆகிவிட்டது. முதலில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன். ஆனால், பண பிரச்சனை காரணமாக இந்த படத்தை வெளியிடாதவே வைத்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீது ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இந்த படம் வெளியிடுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

இறுதியில் வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தின் மீது இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்து வெளியிட்டார். மேலும், இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பல பேர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் இந்த படத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு எல்லாம் வீண் போனது என்று தான் சொல்லணும். இந்த படம் வெளியிட ஏன் இத்தனை வருடங்கள் தாமதமானது? என்ன தான் பிரச்சினை? என்பதை வெளிப்படையாக இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் வெளியீட்டுக்கு முன்பே இந்தப் படத்தில் உள்ள பின்னணிக் குரல்கள் மக்களுக்கு ரொம்பவே பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் கூடப் போகலாம் என்று நானே சொல்லி இருந்தேன்.இதைக் கேட்டு என்னை பல பேர் பாராட்டியும் இருந்தார்கள். பல பேர் கிண்டலும் செய்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : நடிகை ஆண்ட்ரியா, புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த அந்த காதலர் இவர் தானாம். போட்டுடைத்த ஆண்ட்ரியா.

மேலும், தனுஷிடம் இந்த கதையை சொல்லி இருந்தேன். அவரும் படத்திலிருந்து வாய்ஸ் ஓவர் ரொம்ப பிடித்து உள்ளது. நான் இதில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். அந்த படத்தில் இருந்த வாய்ஸ் ஓவர் வேற மாதிரி டப்பிங் செய்தால் நல்லா இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், தனுஷ் இப்படி பண்ணினாலே போதும் என நினைத்தார். அதிலே எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷும் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதால் நானும் விட்டு விட்டேன். அது சரியாகத் தான் இருக்கும் என நினைத்தேன். அதனால் தான் படம் வெளியிட முடியவில்லை என்று நான்

-விளம்பரம்-

சொல்லவில்லை.

நான் இந்த படம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் ஒரு திட்டம் செய்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாதியில் உள்ள காட்சிகள் எல்லாமே நான் நினைத்த மாதிரி இல்லை. மாற்று ஏற்பாடாக தான் சூட்டிங் நடந்தது. முதலில் நான் திட்டமிட்டதை என்னால் பண்ண முடியவில்லை. நடிகர்களின் தேதிகள், பணம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்த படத்திற்கு ஏற்பட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதோடு வேற மாதிரி தான் படத்தின் ஷூட்டிங்கும் பண்ணினேன். ஆனாலும், இந்த படம் மக்களிடையே வரவேற்கப்படும் என்று தான் நினைத்தேன். நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என தெரிவித்து உள்ளார் கவுதம் மேனன்.

சமீபத்தில் வெற்றிமாறன், பார்த்திபன், கௌதம் மேனன் லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வட்ட மேஜை கலந்துரையாடலில் பங்குபெற்றனர். அப்போது பேசிய கௌதம் மேனன், அப்போது பேசிய பார்த்திபன் தனுஷ் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகரை எவ்வாறு வேலை வாங்க வேண்டும் என்பது வெற்றிமாறனுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது அதனால்தான் அசுரன் படத்தில் அத்தனை பேரை அடிக்கும் ஒரு நபராக தனுஷே காட்டினாலும் அதே படத்தில் தனுஷ் அத்தனை பேர் காலில் தொட்டுக் கும்பிடும் காட்சி இருக்கிறது ஆனால் ஒரு சிலர் இமேஜ் காரணமாக இதுபோன்ற விஷயங்களை செய்வது இல்லை ஆனால் தனுஷ் மிகவும் புத்திசாலி என்று கூறுகிறார்கள்.

Related image

அப்போது குறுக்கிட்டு பேசிய கௌதம் மேனன் இந்த இமேஜ் காகத்தான் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் இவர்கள் அனைவரும் நடிகர்கள்தான் உண்மையில் அவர்கள் யாரும் பத்து பேரை அடிக்க முடியாது தனுஷ் அசுரன் படத்தில் அதை கண்டு நான் ரசித்தேன் ஆனால் என்னுடைய படத்தில் தனுஷ் நடிக்கும் போது என்னுடைய படங்களில் ஒரு சில விஷயங்களை வேண்டாம் என்று கூறியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது நான் மிகவும் நேர்மையாக சொல்லுகிறேன் வெற்றிமாறனும் தனுஷும் ஒருவிதமான உறவு இருக்கிறது எனவே வெற்றிமாறன் என்ன சொன்னாலும் அவர் செய்வார் என்ற ஒரு எண்ணம் எனக்கு தோன்றியது ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை இதன் மூலம் இமேஜ் என்ற ஒரு விஷயத்தை இனி நாம் பார்க்கவே கூடாது என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.

Advertisement