பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து அளித்திருக்கும் அதிரடி புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, மேக்கப் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது யூடுயூப் சேனல் வேகமாக வளர்கிறது. மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. ஆரம்பத்தில் ஜிபி முத்து நன்றாக தான் விளையாடி இருந்தார். அதோடு இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:
பின் இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜி.பி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து வருகிறார். இதை அடுத்து இவர் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.பி முத்து அளித்திருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் ஜி.பி முத்து வசித்து வருகிறார்.

ஜி.பி.முத்து அளித்த புகார்:
அங்குள்ள சில பேருடைய ஆக்கிரமிப்பால் கீழ்தெரு என்ற பகுதி காணாமல் போனதாகவும், கோயிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ஜி.பி முத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அதில் அவர், பெருமாள்புரத்தில் கீழ் தெரு என்று ஒரு தெரு இருந்தது. ஒரு இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதியாக பொதுமக்கள் பயன்படுத்தி இருந்தார்கள். இது வருவாய் துறை ஆவணங்களிலும் இருக்கிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமமே காணாமல் போனது. அதேபோல் பெருமாள்புரத்தில் கீழ் தெரு என்ற ஒரு தெருவே காணாமல் போய்விட்டது.

தெருவை காணோம்:
அதை முழுக்க பல்வேறு தனிநபர்களால் ஆபர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பான டாக்குமெண்ட் எல்லாமே என்னிடம் இருக்கிறது. இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து இவர் அளித்த பேட்டியில், கோயில் சொத்தை விற்க யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால், எங்கள் கோயில் சொத்தை வீற்றிருக்கிறார்கள். அதோடு என் வீட்டுக்கு வரும் என்னுடைய சொந்த பாதையையுமே அடைத்திருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட நபர் தனது சொந்த பகை காரணமாகவே அவருடைய குடும்பத்தோடு சேர்ந்து அராஜகம் செய்கிறார். அந்த தனிப்பட்ட நபரால் என்னுடைய குடும்பத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது.
https://www.youtube.com/watch?v=LbWjcWizWKA
ஜி.பி.முத்து அளித்த பேட்டி:
என்னுடைய குடும்பத்தினரை தகாத வார்த்தைகளும் திட்டுகிறார். எல்லோருமே நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால், யாருமே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழ்தெருவை அதிகாரிகள் தான் கண்டுபிடித்து தரணும். அதுக்காக தான் மனு கொடுக்க வந்திருக்கிறேன். நான் ஆறு வருஷமாக இதுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் தண்ணீர் அடித்து விட்டு எல்லாம் பிரச்சனை செய்தார்கள். நான் அதை எல்லாம் நான் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். 20 அடி பொதுபாதையை இல்லாமல் செய்திருக்கிறார்கள். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் தான் இப்படி செய்கிறார்கள். என் சோலியை முடிக்கணும் என்பதே குறிக்கோளாக இருக்கிறார்கள். இனியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தீக்குளிப்பேன் என்று கூறியிருக்கிறார்.






