எனக்கு இருந்த குறை என் மகளுக்கு இல்லை..! அவள் தான் என் டிரைவர்..!நடிகர் பக்ரு உருக்கம்..!

0
1523
Guinness-Pakru
- Advertisement -

தமிழில் ஜீவாவின் டிஷும் , மற்றும் விஜயின் காவலன் படத்தில் நடித்தவர் தான் மலையாள நடிகர் கின்னஸ் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார் சினிமாவிற்காக தனது பெயரை பக்ரு என்று மாற்றிக்கொண்டார்.மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள பக்ரு.

-விளம்பரம்-

Guinness-Pakru

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பக்ரு தனது மகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். சினிமால என்னால சிறப்பா வரமுடியும்கிற நம்பிக்கையைப் பெற்றோருக்குக் கொடுக்கும்விதமா எனக்கு சில வாய்ப்புகள் அமைஞ்சது. அந்த சூழல்ல காயத்ரி என் வாழ்க்கைத் துணையாக வந்தது, என் வாழ்வின் அழகான அத்தியாயம்.

எனக்கு நம்பிக்கை கொடுத்தது என் மனைவி தான் . பின்னர் 2009-ல் எங்க பொண்ணு தீப்த கீர்த்தி பிறந்தா. ஏழு வயசு வரை என்னை அண்ணன்னுதான் நினைச்சுகிட்டிருந்தா!’’ எனும்போது, பக்ரூ கண்களில் சிறிய புன்னகை. “என் பொண்ணுதான் என் உலகம். பாடம் சொல்லிக்கொடுக்கிறது, விளையாடுறது, கதை சொல்றது, காமெடி பண்றது, சமையல் பண்றதுன்னு நாங்க இணை பிரியாத ஃப்ரெண்ட்ஸ்.

-விளம்பரம்-

ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பல்லாம் என்னால சைக்கிள், பைக் ஓட்ட முடியலையேங்கிற கவலையை எனக்கு டிரைவரா இருந்து என் ஃப்ரெண்ட்ஸ்தான் நிவர்த்தி செய்வாங்க. இப்போ மூன்றாவது படிக்கிற என் பொண்ணுதான், என் சைக்கிள் டிரைவர். எனக்கு வந்த குறை அவளுக்கு இல்லை என்பதில் நான் ஆண்டவனுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன் என்றார் பக்ரூ.

Advertisement