ராஜ் & டிகே என்ற இரட்டை இயக்குனர்களால் உருவாகி இருக்கும் வெப் தொடர் தான் `கன்ஸ் & குலாப்ஸ்’ . இந்த படத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். இதுதான் துல்கரின் முதல் வெப் சீரிஸ். இந்த படத்தை நெட்ப்ளிக்சில் வெளியிட்டு இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் குலாப்கன்ஜ் என்ற ஒரு அழகான மலை கிராமம். இந்த கிராமத்தில் கேங்ஸ்டர் ஆக ராஜ்குமார் ராவ் தந்தை இருக்கிறார். பின் இவர் இறந்து விடுகிறார். ஆனால், ரவுடியிசம் பிடிக்காமல் ராஜ்குமார் ராவ் இருக்கிறார். அந்த கிராமத்தில் இருந்து தப்பித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்க நினைக்கிறார் ராஜ்குமார் ராவ். இன்னொரு பக்கம், ஊரையே ஆட்டிப்படைக்கும் ஓபியம் போதை பொருள் விற்பனை செய்ய அந்த இடத்தை பிடிக்க ஆதர்ஷ் கவுரவ் துடிக்கிறார்.
போலீசுக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே இருக்கும் நிலையை உடைக்க போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக துல்கர் சல்மான் வருகிறார். இதையெல்லாம் சமாளித்து அந்த கேங்ஸ்டர் டீமை எதிர்கொண்டு போதைப் பொருளை ஒலித்தாரா? இல்லையா? என்பதே வெப்சீரிஸ் மீதி கதை. இந்த தொடர் 90களில் நடக்கும் கதை போல இருக்கிறது. பழைய வீசிடியை எடுத்து பஞ்சாயத்து போர்டு டிவியில் போட்டு பார்ப்பது போல அறுந்த பழசாகவே கதை இருக்கிறது.
ஆனால், ஆரம்பத்தில் கதை சொதப்பலாக இருந்தாலும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது. சட்டவிரோத செயல், ஈகோ, ஏட்டிக்கு போட்டி, சண்டை என்று கதை நகர்கிறது. பழிக்குப் பழி வழக்கமான சண்டையை தான் இயக்குனர் இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் பார்வையாளர்களை ஈர்த்து இருக்கிறார் என்று சொல்லலாம். நட்பு, காதல், டார்க் காமெடி என்று கொஞ்சம் வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.
தன் தந்தையைப் போல ரவுடியாக வேண்டாம் என்று ராஜ்குமார் ராவ் துடிக்கிறார். ஆனால், அவருடைய ரவுடி தான் பின்தொடர்ந்து அவரை ஈர்க்கிறது. ராஜ்குமார் ரவுடி நடிப்பு பாராட்டுக்கூடிய வகையில் இருக்கிறது. இவரை அடுத்து துல்கர் சல்மான் போலீஸ் உடையில் மாஸ்காட்டி இருக்கிறார். இவர் போலீசாக இருந்தாலும் அவருக்கு வரும் வசனங்கள் எல்லாம் அறுந்த பழசாக இருந்தது. இதுவே அவருக்கு மைனஸை கொடுத்தது என்று சொல்லலாம்.
படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க கூடிய அளவில் இருப்பதால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமே இல்லை. 90 காலகட்டத்தில் வில்லனாக வந்த ரகுவரன் கெட்டப்பை இப்போதும் காண்பித்திருக்கிறார்கள். வழக்கமான கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் பழைய நம்பியார் காலத்துக்கு இயக்குனர் சென்று விட்டார் என்று சொல்லலாம். அரசாங்கத்திற்கு தெரியாமல் நடக்கும் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
அதற்கு பின் நடக்கும் அரசியலும் பின்னணியும் இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. மொத்தத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் டார்க் காமெடி, கிளைமாக்ஸ் காட்சி படத்திற்கு ஆறுதலாக நின்று இருக்கிறது. மொத்தத்தில் ஒரு முறை சென்று பார்க்கலாம். மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் எதிர்பார்ப்புகளும் இல்லை.
நிறை:
கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு
டார்க் காமெடி
பின்னணி இசை ஓகே
மற்றபடி பெரிதாக படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
குறைகள்:
இயக்குனர் கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்
வழக்கமான கேங்ஸ்டர் கதைதான்
ஆரம்பத்திலேயே சலிப்படையை வைத்திருக்கிறது
ஒவ்வொரு காட்சிகளும் யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது
வசனங்கள் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை
மொத்தத்தில் கன்ஸ் & குலாப்ஸ்- கொலாப்ஸ் தான்