யோகி பாபுவின் கூர்கா திரை விமர்சனம்.!

0
2475
Gurkha
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு தான். சமீப காலமாக லீட் ரோலில் நடித்து வரும் யோகி பாபு தற்போது ‘கூர்கா’ படத்தில் நடித்துள்ளார். இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

- Advertisement -

படம் பார்க்க உள்ளே நுழையும் போதே இது ஒரு முழு நீள காமெடி படம், எனவே லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது என்ற எண்ணத்துடன் தான் அமர்ந்தோம். படத்தின் கதை என்னவென்றால் இந்த யோகி பாபுவின் தாத்தா ஒரு நேபாளி அவரது மனைவி வட சென்னையை சேர்ந்தவர். இவர்கள் கூர்க்கா வம்சா வழியாக வாழ்ந்து வருகின்றனர்.

அதனால் தனது பேரனான யோகி பாபுவையும் கூர்க்காவாக தான் ஆக வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், யோகி பாபுவிற்கு போலீசாக ஆக வேண்டும் என்று தான் ஆசை, இதனால் போலீஸ் வேளைக்கு முயற்சிக்கிறார் யோகி பாபு. ஆனால், அந்த தேர்வில் தோற்று விடுகிறார் யோகி பாபு.

-விளம்பரம்-

இதே தேர்வில் நாய் ஒன்றும் போலீஸ் நாய் தேர்வில் தோல்வி அடைந்து விடுகிறது. இதிலிருந்து துவங்குகிறது யோகி பாபுவிற்கும் அந்த நாய்க்கும் உண்டான உறவு. யோகி பாபு போலீஸ் தேர்வில் தோல்வியடைந்த நேரத்தில் அவருக்கு ஒரு வாட்ச்மேன் வேலை கிடைக்கிறது. அப்போது தான் ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்க்கிறார் யோகி பாபு.

அவர் மீது காதலில் விழும் யோகி பாபு அவரை எப்படி கரெக்ட் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். அந்த அமெரிக்க தூதரேகவாக இருக்கும் அந்த வெளிநாட்டு பெண்ணும் அடிக்கடி யோகி பாபு பணிபுரியும் அதே மாலுக்கு அடிக்கடி வருகிறார்.

அப்படி ஒருமுறை அந்த பெண் மாலுக்கு வரும் போது அவரை கடத்துவதற்க்கு ஒரு தீவிரவாத கும்பல் வருகிறது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்து அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார், இறுதியில் அந்த பெண் யோகி பாபுவை காதலிக்கிறாரா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

ப்ளஸ் :

யோகி பாபு படத்தில் காமெடியை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களை இந்த படம் ஓரளவுக்கு குஷிபடுத்தியுள்ளது. மேலும், படத்தில் யோகி பாபுவின் கௌண்டர், ஆனந்த் ராஜுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது மேலும், யோகி பாபுவுடன் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் இரண்டு கதாபாத்திரங்கள் படத்திற்கு பலமாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பின்னர் சார்லியை முழு நீள காமெடி படத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மைனஸ் :

படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. முதல் பாதி முழக்க அரசியல் தலைவர்களையும், மற்ற நபர்களையும் கலாய்பதிலேயே படம் நகர்வது கொஞ்சம் சலிப்பை தருகிறது. மேலும், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை முடிக்க வேண்டும் என்பதற்காக முடிப்பது போல தோன்றுகிறது.

இறுதி அலசல் :

யோகி பாபு ஹீரோவாக நடித்த தர்ம பிரபு படத்தில் காமெடியும், கவுண்டரும் இல்லை என்று கூறிய ரசிகர்களுக்கு ஒரு நல்ல காமெடி படத்தை கொடுத்துளளார் யோகி பாபு. மேலும், இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக காண்பிக்காமல் காமெடியனாக

Advertisement