ராம்கி, நட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘குருமூர்த்தி’ – முழு விமர்சனம் இதோ.

0
1830
Gurumoorthy
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குருமூர்த்தி. இந்த படத்தை இயக்குனர் கே.பி தனசேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராம்கி, பூனம் பஜ்வா, மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்திய தேவ் உதயசங்கர் இசையமைத்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கதாநாயகனாக நட்டி நடித்திருக்கும் குருமூர்த்தி படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ராம்கி தொழிலதிபராக இருக்கிறார். இவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் பணங்களை பதுக்கி வைத்திருக்கிறார். இப்படி இவர் பதுக்கி வைத்திருக்கும் பணத்தில் இருந்து 5 கோடி ரூபாய் கருப்பு பணத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்கிறார். அப்படி அவர் செல்லும் வழியில் சில நபர்களால் அந்த பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. அந்த கொள்ளையை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக நட்டி நியமிக்கப்படுகிறார்.

- Advertisement -

அந்த பணத்தை கொள்ளை அடித்தது யார்? அதை நட்டி கைப்பற்றினாரா? இல்லையா? ராம்கி நிலை என்ன? இது அரசாங்கத்துக்கு எதிரான கருப்பு பணம் என்பது நட்டிக்கு தெரிய வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடராஜ் கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு கமர்சியல் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. வழக்கமான வில்லன் ஹீரோவுக்கு இடையான கதையாக இருந்தாலும், சில மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களை சோதிக்க வைக்கிறது.
ஊட்டியை சுற்றியே இந்த படம் முழுக்க எடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல கதையாக இருந்தாலும் இயக்குனர் அதில் இன்னும் சுவாரசியத்தை காண்பித்து இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக வந்திருக்கிறது. ஆரம்பத்தில் படம் மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. படத்தில் காணாமல் போன பணப்பெட்டியை எப்படி போலீஸ் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த பணப்பெட்டி யார் யார் கையில் சென்று எப்படி போலீசிடம் சிக்கியது என்ற கதையை இயக்குனர் கையாண்டு இருக்கிறார். பில்டப் காட்சிகளும் காமெடிகளும் பெரிதாக செட் ஆகவில்லை. கதைக்களம் சிம்பிளாக இருந்தாலும் சில இடங்களில் திருப்தியை கொடுத்திருக்கிறது. ஆகவே ஒரு சுமாரான படமாக குருமூர்த்தி இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

கிளைமாக்ஸ் சிறப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

குறை:

ஆங்காங்கே சில காட்சிகள் சலிப்படைய வைத்திருக்கிறது.

காமெடிகள் பெரிதாக செட் ஆகவில்லை

கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பாடல்கள் பெரிதாக செட் ஆகவில்லை

மொத்தத்தில் குருமூர்த்தி – கடமையை செய்திருக்கிறார்

Advertisement