தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் யூத் என்ற படத்தை இயக்கியும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய ஹாப்பி ராஜ் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி அளித்தார் ஜிவி பிரகாஷ்.

அப்போது அவர், யூத் படத்திற்கு சம்பளம் வாங்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர், அந்த படத்தை சம்பளம் வாங்காமல் செய்ததற்கு காரணம் கருணாஸ் தான். அவர் என்னுடைய டார்லிங் படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. கருணாசும் அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகத் தான் நான் யூத் படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்தேன். யூத் படத்தில் அறிமுக நடிகர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
ஜி வி பிரகாஷ் பேட்டி:
இதனால் பாடல்கள் உரிமை வாங்க எந்த ஒரு ஆடியோ லேபில்களுமே வரவில்லை. குறைவான பணத்தை கொடுத்து உரிமத்தை பெறவே நினைத்தார்கள். மியூசிக்க்காக நாங்கள் நிறைய செலவு செய்து இருப்பதால் அது எங்களுக்கு சரியாக வராது என்று முடிவெடுத்து சொந்தமாக நானே ஒரு மியூசிக் லேபிள் தொடங்கி விட்டேன். அதற்குப் பிறகுதான் பாடல்கள் வெளிவந்தது. அது பெரிய அளவிலும் ஈட்டானது.
https://www.youtube.com/watch?v=xjYrcUX0hQw
சம்பளம் வாங்காத காரணம்:
அப்போது குறைவான பணத்திற்கு பாடல்கள் உரிமைத்தை கேட்ட நிறுவனங்கள் அதைவிட ஐந்து மடங்கு அதிகமான தொகையை கொடுத்து வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாக சொன்னார்கள். ஆனால், அதை கொடுக்காமல் நாங்களே வைத்துக்கொண்டோம். யூத் படத்திற்கு நான் இப்படி எல்லாம் கணக்குகளை எல்லாம் போட்டு இசை அமைக்கவில்லை. அன்பிற்காக மட்டும்தான் இதை நான் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
Youth: 'யூத்' படத்திற்கு சம்பளம் வாங்காததற்கு காரணம்.!" - சொல்கிறார் ஜி.வி. பிரகாஷ்https://t.co/eY6sks5Fl5
— சினிமா விகடன் (@CinemaVikatan) March 30, 2026
ஹேப்பி ராஜ் படம்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜி.வி. பிரகாஷ். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஹேப்பி ராஜ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், மதுரை முத்து, கீதா கைலாசம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.






