பல அவமானங்களை கடந்து தேசிய விருதை வென்ற ஜி வி பிரகாஷ் – அவர் போட்ட மிக உருக்கமான பதிவு.

0
595
gvprakash
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இறுதியாக இவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் வெளியான ஐயங்கரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : நான் பேசனதுல இது மட்டும் தான் உங்களுக்கு தலைப்பா கிடைச்சதா – முன்னனி பத்திரிகையை கலாய்த்த Rj பாலாஜி.

- Advertisement -

ஜி வி பிரகாஷுக்கு மறுக்கப்படும் அங்கீகாரம் :

ஜி வி பிரகாஷ் ஒரு நல்ல நடிகர் என்பதைவிட ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை தான் பலரும் ஒப்புக்கொள்ளவார்கள். அதிலும் இவர் இசையமைத்த வெயில், மயக்கம் என்ன, ராஜா ராணி, ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், அசுரன் போன்ற பல படங்களில் இவரின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இதுவரை இவரது இசைக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.

அனிருத்துக்கு கிடைத்த விருது :

ஆனால், இவருக்கு பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு ஏகப்பட்ட அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிர்ச்சி மியூசிக் அவார்ட் நடைபெற்றது. அதில் அனிருத்திற்கு விருது கிடைத்தது. அப்போது பேசிய அனிருத் ‘பீஸ்டுக்கும் மியூசிக் டைரக்டர் அனிருத் தான், Ak62கும் மியூசிக் டைரக்டர் அனிருத் தான்’ என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

ஜி வி பிரகாஷ் குறித்து குவிந்த கமன்ட் :

அனிருத் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது மேடைக்கு கீழ் அமர்ந்து கைதட்டி கொண்டு இருக்கும் ஜிவி பிரகாஷ்ஷை காண்பித்து இருந்தனர். இந்த வீடியோவிற்கு கீழ் அனிருத்திற்கு வாழ்த்து சொன்னவர்களை விட ஜி வி பிரகாஷ் குறித்து கமன்ட் போட்ட ரசிகர்கள் தான் அதிகம். அதிலும் பெரும்பாலான ரசிகர்கள் இதைவிட அதிகமான பாராட்டுகளைப் பெற தகுதியான வர் Gv Prakash அவர்கள் தான் என்று கமன்ட் போட்டு இருக்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-174-1024x640.jpg

ஜி வி பிரகாஷுக்கு கிடைக்காத தேசிய விருது :

கடந்த ஆண்டு கூட 67-வது தேசிய திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து பலருக்கு தேசிய விருதுகளை வாங்கி இருந்தனர். இதில் மற்றவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை விட , விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது தான் பெரும் கேலிக்கு உள்ளாகியது. அவரை விட அசுரன் படத்திற்காக ஜி வி பிரகாஷ், தேசிய விருதை வென்றிருக்கலாம் என்று பலரும் கூறி வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் 68வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய் ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அந்த நாள் வந்து சேரும்.இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. எனது தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் நன்றி. சூரறைப் போற்று படக்குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நாள் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement