ரஜினி படங்களை விமர்சித்தாக முன்னனி பத்திரிக்கை போட்ட பதிவிற்கு ஆர் ஜே பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார்.
இதையும் பாருங்க : இந்த ரெண்டு பேரில் அவர் ஓகே சொன்னால் திருமணம் செய்துகொள்கிறேன் – குக்கு வித் கோமாளி சந்தோஷ் ஓபன் டால்க்.
வீட்ல விசேஷம் படம் பற்றிய தகவல்:
அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’. இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்துள்ளார்.இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து. உள்ளனர்.இந்தப் படத்தில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கும்போது திடீரென்று அம்மா கர்ப்பமாகிறாள். இதனால் வீட்டில் உள்ள பலரும் குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார்கள்.இது தான் படத்தின் கான்செப்ட்.
பல்கலைகழகத்தில் நடந்த இசை வெளியீடு :
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இந்த கல்லூரி குறித்து பாலாஜி பேசியபோது,இந்த கல்லூரிக்கு எப்போது வந்தாலும் நான் ஆச்சரியமாக பார்ப்பேன் என்றும் ஒரு டெஸ்க்கில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பையன் உட்கார்ந்து இருப்பார்கள் என்றும் இந்த சமநிலையை நான் வேற எந்த கல்லூரியிலும் பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே பெண்களிடம் பேச கூடாது என்று பொத்தி பொத்தி வளர்ப்பதால் தான் அவர்கள் வளர்ந்தவுடன் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை.
ரஜினி படங்களை விமர்சித்த ஆர் ஜே பாலாஜி :
நமது சினிமாவும் பெண்கள் குறித்து தவறான புரிதலையே காட்டிக் கொண்டிருக்கின்றனர்.’மன்னன்’ படத்தில் நன்றாக படித்து வேலை பார்த்து கம்பெனியை நிர்வாகம் செய்யும் விஜயசாந்தி கெட்டவள் என்றும் வீட்டில் அம்மாவுக்கு காபி போட்டுக்கொடுக்கும் குஷ்பு நல்லவர் என்றும் காட்டுவார்கள். அதேபோல் படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்ட ரம்யாகிருஷ்ணன் கெட்டவள், பாமர பெண் செளந்தர்யா நல்லவள் என்று காட்டி இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
தலைப்பை கண்டு கலாய்த்த ஆர் ஜே பாலாஜி :
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் ஆர் ஜே பாலாஜியின் இந்த பேச்சை செய்தியாக வெளியிட்ட முன்னணி பத்திரிக்கை ஒன்று ‘ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர் ஜே பாலாஜி’ என்று தலைப்பை கொடுத்து இருந்தது. அந்த செய்தியை பகிர்ந்த ஆர் ஜே பாலாஜி ‘நான் பேசிய மத்த விஷயங்களை தவிர, உங்களுக்கு இது மட்டும் தான் உங்களுக்கு தலைப்பாக கேட்டு இருக்கிறதா ? நல்ல பத்திரிகை. லாரி டாமல், ட்ரைவர் பணால் என்று தன்னுடைய ஸ்டைலில் கலாய்த்து இருக்கிறார்.’