குட் நைட் படத்தை விட ஜி வி பிரகாஷின் டியர் படம் கை கொடுத்ததா? முழு விமர்சனம் இதோ

0
438
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த ரெபல், கள்வன் போன்ற படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது இவர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டியர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், இளவரசு, நந்தினி, ரோகினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

கதைக்களம்:

படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னுரை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலிருந்தே தூக்கத்தின் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதனால் இவரை பலரும் கிண்டல் அடித்தும் இருக்கிறார்கள். அதோடு இவரை பெண் பார்க்க வரும் நபர்களிடம் வெளிப்படகாகவே தனக்கு இருக்கும் குறட்டை விடும் பழக்கத்தை சொல்லிவிடுவார். இதனால இவருடைய திருமணமும் தள்ளிக்கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் ஜிவி பிரகாஷ் சென்னை சேர்ந்தவர்.

இவர் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக 8 மணி நேரம் தூங்க கூடியவர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவருக்கு ஒரு பென்சில் விழுந்த சத்தம் கேட்டால் கூட தூக்கத்திலிருந்து எழுந்து விடுவார். இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. கூட்டு குடும்பத்தில் இவர்களுடைய வாழ்க்கை நகர்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டையினால் இவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது? குறட்டையால் இருவரும் பிரிந்தார்களா? ஐஸ்வர்யா ராஜேஷ் பிரச்சினை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் அப்படியே மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படதின் கதை போல் இருக்கிறது. இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான். அந்த படத்தில் ஹீரோ குறட்டை விடுவார், இந்த படத்தில் ஹீரோயினி குறட்டை விடுகிறார். மற்றபடி அரைத்த மாவை தான் இந்த படத்திலும் இயக்குனர் அரைத்திருக்கிறார். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது கதை நகருகிறது. இருந்தாலும் இவர் தன் நடிப்பை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.

இவரை அடுத்து ஜிவி பிரகாஷின் நடிப்பு எப்பவும் போல தான் இருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம். ஆனால், இவர்கள் தொடர்ந்து வரும் காளி வெங்கட் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. குறட்டையினால் கணவன்- மனைவி இடையில் என்ன பிரச்சனை வருகிறது என்றுதான் இயக்குனர் கொடுத்திருக்கிறார். இது ஏற்கனவே படத்தில் காண்பித்து விட்டார்கள்.

அதே காதல், காமெடி, சண்டை போன்ற காட்சிகள் எல்லாம் பெரிதாக எமோஷனல் எதுவும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் கதையின் உடைய வேகமும் பொறுமையாகவே செல்கிறது. கதையை சுட்டு இருந்தாலும் அதைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் ஜிவி பிரகாஷின் இந்த படமும் சொதப்பல் என்றே சொல்லலாம்.

நிறை:

காளி வெங்கட்டின் நடிப்பு நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஓகே

குறட்டை கான்செப்ட்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எல்லாம் நிறைகள் எதுவுமில்லை

குறை :

படம் ரொம்ப பொறுமையாக செல்கிறது

நடிகர்களின் கதாபாத்திரங்களை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

இந்த படத்திலும் அரைத்த மாவை தான் இயக்குனர் அரைத்து இருக்கிறார்

பாடல்களும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

மொத்தத்தில் டியர் – தோல்வி

Advertisement