விளக்கமே கொடுக்காமல் சென்சாரால் நீக்கப்பட்ட பிரதமர் குறித்த காட்சி – கடுப்பாகி இயக்குனர் போட்ட பதிவு.

0
467
rathnakumar
- Advertisement -

இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி குறித்து ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மது என்ற குறும்படத்தின் மூலம் சினிமாத்துறையில் என்ட்ரி ஆனவர் இயக்குனர் ரத்தினகுமார். பின் இவர் வைபவ் வைத்து மேயாத மான் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஆடை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

ரத்னகுமார் :

இந்த படத்தில் அமலா பால் நடித்து இருந்தார். இந்த படம் மிகவும் சர்ச்சை ஆகி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதற்கு பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த மாஸ்டர் திரைப்படத்தில் இணை இயக்குனராக ரத்னகுமார் பணியாற்றியிருந்தார். மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தில் இணை இயக்குனராக ரத்னகுமார் பணியாற்றியிருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தது.

- Advertisement -

லியோ :

இந்நிலையில் தற்போது உருவாக்கி வரும் “லியோ” படத்திலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா பல ஆண்டுகளை கழித்து நடிக்கிறார். மேலும் மிஸ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என பல நட்சித்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் கமலஹாசன் கேமியோ கதாபாத்திரமாக வருவார் என ஏதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது.

குலுகுலு படத்தில் காட்சி நீக்கம் :

இப்படிபட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் நண்பர் இயக்குனர் ரத்னகுமார் கடைசியாக குலுகுலு என்ற படத்தை இயக்கியிருந்தார், இப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தில் வரும் “இந்திய பிரதமர்” என்ற காட்சியை மட்டும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் எந்த விளக்கமும் கொடுக்காமல் நீக்கியிருந்தது. இது பற்றிய தகவல் தீயாய் சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது.

-விளம்பரம்-

ரத்னகுமார் ட்விட் பதிவு :

இந்நிலையில் இந்த செய்தியின் புகைப்படத்தை இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன்னிச்சையாக ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்குவது நியாயமற்ற விளையாட்டு. நான் குலுகுலு படத்திற்க்காக மட்டும் பேசவில்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூணாக இருக்கும் கலைக்கு நீங்கள் இவ்வளவு கொடூரமாக இருந்தால்.

தமிழ்நாட்டை தமிழகமாக மாற்ற முயற்சிப்பதை விட இந்தியாவை அமெரிக்காவாக ( united states of india) மாற்றுவது நல்லது நன்றி என்று பதிவிருந்தார். இதே போன்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பே வெளியான “பதான்” படத்திலும் வரும் ”இந்திய பிரதமர்” என்ற காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement