பெண்கள் கூட கூச்சப்படுவார்கள் !ஆனால் ஜி வி.பிரகாஷ் அதை கையில் வைத்திருக்கிறார் !

0
2566

அக்சய் குமார் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் Padman படம் வெளியானது. இந்த படம் பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை பொருத்த விழிப்புணர்வு படமாகும்.

padman

மேலும், இந்த படம் கோயமுத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் உண்மையான வாழ்க்கை கதையாகும். இந்நிலையில் சானிட்டரி நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல பிரபலங்கள்#PadmanChallenge செய்து வருகின்றனர்.

இதற்காக பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை கையில் வைத்து காட்டுவதுதான், இதனால் எனக்கு கூச்சமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ இல்லை என பல பிரபலங்கள் இந்த PadmanChallenge செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஜி.வி பிரகாஷ் இந்த சேலஞ்சை செய்வதுடன், தோனி, ராஜமௌலி, கமல்ஹாசன் மற்றும் அக்சய்குமார் ஆகியோரையும் செய்ய சொல்லி சேலஞ் செய்துள்ளார்