3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம் – விமர்சித்த எச் ராஜா. சூர்யாவின் ரியாக்ஷனை பாருங்க.

0
803
hraja
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
ஜெய்பீம் - சூர்யாவை 'சுயநலமி' என ஹெச். ராஜா ட்வீட்; லைக் செய்த சூர்யா

இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார்.

- Advertisement -

மேலும், இந்த திரைப்படம் பழங்குடியினர் உரிமை பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல் மொழி திணிப்பு தொடர்பான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன . உதாரணத்திற்கு போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் ஹிந்தி மொழியில் தன்னிடம் பேசும் வட இந்தியர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழில் பேசு என்று பிரகாஷ்ராஜ் அதில் கூறுகிறார்.

Image

இந்த காட்சி சமூக வளைத்ததில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து பா ஜ கவை சேர்ந்த எச் ராஜா எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவை விமர்சனம் செய்துள்ளார். நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம் என்று ட்வீட் செய்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எச் ராஜாவின் இந்த டீவீட்டை சூர்யா லைக் செய்து எச் ராஜாவிற்கு மறைமுகமாக சர்காசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement