தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ஹிந்தி சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருந்தார். பின்னர் இவர் தெலுங்கு படத்தின் மூலம் தான் வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இடையில் இவர் எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் இவர் நடித்த “மஹா” படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சிம்புவும் நடித்திருந்தார். இப்படமானது அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்க வில்லை. அதன் பின் இவர் பெரிதாக படங்களில் காணவில்லை.
ஹன்சிகா திருமணம்:
இதற்கிடையில் ஹன்சிகா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டிலிருந்தே தொழில் கூட்டாளியாக பயணித்து வந்தார்கள். பின் இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

ஹன்சிகா விவாகரத்து:
ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதல் திருமணம் செய்திருந்தார். இருந்தாலுமே ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியை சோஹைல் விவாகரத்து செய்தார். அதற்குப்பின் சோஹைல், ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான சில வருடங்களிலேயே ஹன்சிகா- சோஹைல் உடைய உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் தான் இருவரும் விவாகரத்து கேட்டு இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஹன்ஷிகா, திருமணத்திற்கு பிறகு இரண்டு பேரும் சில காலம் தான் சேர்ந்து வாழ்ந்தோம்.
https://www.youtube.com/watch?v=88xDUm0558Q
நீதிமன்றம் தீர்ப்பு:
இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் வெவ்வேறு குணாதிசயங்கள், கருத்துக்கள், வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருப்பதை படிப்படியாக உணர்ந்தோம். அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் விவாகரத்து வேண்டும் என்று கூறப்பட்டது. இதை அடுத்து இன்று நீதிமன்றத்தில் ஹன்சிகா- சோஹைல் தம்பதிக்கு பரஸ்பரம் சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. ஹன்சிகா விவாகரத்து விஷயத்தில் தன்னுடைய கணவரிடம் இருந்து எந்த ஒரு ஜீவனாம்சமும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது






