ஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்

0
4212
har-hara-maha-deviki-review
- Advertisement -

ஆளுங்கட்சியில் நடக்கவிருக்கும் பிரசாரத்தில் சத்தத்தை (பாம்) வைத்து திட்டத்தை தீட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் எதிர்கட்சித் தலைவர் (ரவி மரியா). இதுதான் படத்தின் மெயின் கதை. படத்துள் நடக்கும் இக்கதையோடு ஹீரோ கௌதம் கார்த்திக்கின் ப்ரேக்அப் கதை, ‘மொட்டை’ ராஜேந்திரனின் பாம் கதை, பாலா சரவணனின் கள்ள நோட்டுக் கதை, ஆர்.கே. சுரேஷின் போலீஸ் கதை என ஐந்து விதமான கதையும் ‘ஹர ஹர மஹாதேவகி’ எனும் ரிசார்டில் ஒன்று கூடும் கதைதான் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் ஒன் லைன்.

-விளம்பரம்-

- Advertisement -

இதுபோன்ற கதைக் களத்தைக் கொண்ட பல கமர்ஷியல் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக பிரபு, கவுண்டமணி காம்போவில் வெளியான ‘தேடினேன் வந்தது’ படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்தில் குபீர் காமெடி, இதில் பகீர் காமெடி. எதிர்கட்சித் தலைவரான ரவி மரியா, ஆளுங்கட்சியில் நடக்கும் கூட்டத்தில் குண்டு வைத்து தேர்தலை தள்ளிப்போடலாம் என்று திட்டம் தீட்டி, ஆளுங்கட்சியே இலவசமாகக் கொடுத்த பை ஒன்றில் பாம் செட் செய்து, அதை வைப்பதற்காக ராஜேந்திரனையும், கருணாகரனையும் அனுப்பி வைக்கிறார்.

இதையும் படிக்கலாமே:
ஜூலி தான் கலக்கப்போவது யாரு அடுத்த சீசனில் ancher

-விளம்பரம்-

மறுபக்கம் ஹீரோ ஹரி (கௌதம் கார்த்திக்), ஹீரோயின் ரம்யாவும் (நிக்கி கல்ராணி) ப்ரேக்அப் செய்ய முடிவெடுத்திருப்பார்கள். அதற்காக இருவரும் ஒருவருக்கொருவர் வாங்கிக் கொடுத்த பொருட்களை திரும்பத் தருவதாக டீலிங். இன்னொரு பக்கம் பாலா சரவணன் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றி சம்பாதித்துக் கொண்டிருப்பார். பக்கம் இன்னும் முடியல பாஸ் வெயிட் பண்ணுங்க.

கடைசி பக்கமாக ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தம்பதியினரின் குழந்தையைக் கடத்தி வைத்து ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவார் லிங்கா, இந்த சம்பவத்தின் போதுதான் போலீஸாக ஆர்.கே.சுரேஷ் என்ட்ரி கொடுப்பார். ராஜேந்திரனிடம் இருக்கும் ‘பாம்’ பை, கௌதம், நிக்கி கொடுத்த பொருட்களை எடுத்து வைத்திருக்கும் பை, பாலா சரவணனிடம் இருக்கும் கள்ள நோட்டுப் பை, லிங்கா கேட்கும் ஒரு கோடிப் பை, க்ளைமாக்ஸில் வரும் பாம்புப் பை என படம் முழுவதும் பல பைகளைக் காணலாம், கிளைமாக்ஸில் பைகளை மட்டுமே காணலாம். எப்படி கௌதம் – நிக்கி சேர்கிறார்கள், ஆர்.கே.சுரேஷ் குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார், பாம் வெடித்ததா இல்லையா? என்பதே க்ளைமாக்ஸ். அப்படியே 90-களில் வெளியான ஆள்மாறாட்டப் படங்களை நினைவுப்படுத்தியது.

Nikki Galrani, Gautham Karthik in Hara Hara Mahadevaki Movie HD Stills

கதை பெரிதாக இல்லாவிட்டாலும், எடுத்த கான்செப்ட்டையும், இருக்கும் நடிகர்களையும் வைத்து முழுக்க முழுக்க ஒரு பெர்ஃபெக்ட் காமெடி கலாட்டா படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் படத்தின் பல இடங்களில் காமெடிக் காட்சிகள் எடுபடவே இல்லை. சில இடத்தில் லேசாக கிச்சுகிச்சு மூட்டினாலும், ‘இப்போ ஏன் இந்த இடத்துல, இந்த சீன் வருது?’ என்ற குழப்படி பல இடங்களில் இருக்கிறது.

இயக்குநர் சன்தோஷ் இந்தப் படத்துக்கு ஏன் அடல்ட் காமெடி கான்செப்ட்டைக் கையில் எடுத்தார் என்பது தெரியவில்லை. நண்பர்களுக்கு மத்தியில் அடல்ட் ஹ்யூமர் ஓகே, ஆனால் ஹீரோவின் அம்மாவிடமே அவரது நண்பர் பேசுவதும், பதிலுக்கு அவரும் ரிப்ளை செய்வதெல்லாம் டூ மட்ச். அப்படியே எடுப்பது அடல்ட் காமெடி என முடிவெடுத்துவிட்டாலும், அதை முழுமையாக செய்திருக்க வேண்டும். எக்கச்சக்க சொதப்பல்.

சதீஷின் காமெடிகள் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. டபுள் மீனிங் காமெடிகளோடு, சில நார்மல் காமெடிகளும் பல இடங்களில் வழிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஆனால் பாம்பு போனதுக்கு அப்புறமுமா? அந்த செட்டில் படத்தின் ஷூட்டிங் முடிந்து, அடுத்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரையா ஒடிகிட்டே இருக்கது. கமர்ஷியல் படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்?

இன்டர்வலுக்கு முன் வரும் சீனிலும், க்ளைமாக்ஸில் இடம்பெறும் காமெடிகளுமே படத்தில் பெரிய ஆறுதல். ராஜேந்திரன் ஆங்காங்கே காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கருணாகரன் படத்தில் சொன்னதுபோல் ராஜேந்திரனைப் பார்த்து மிரண்டவர்கள் எல்லோரும், விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ‘ஃப்ளாஷ்மாப்’ கான்செப்ட்டில் தான் பார்க்கும் தொழிலோடு ரிலேட் செய்து கௌதம் கார்த்திக் நிக்கிக்குக் கொடுத்த அதிர்ச்சி ப்ரொபோஸல் அல்டிமேட். ப்ளூப்பர்ஸில் எல்லோரும் ஒன் மோர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், படத்தின் எடிட்டிங்கை முடித்துவிட்டு படத்தையும் ‘ஒன் மோர்’ பார்த்திருக்கலாம்.

படத்தின் வசனங்களை சொல்ல வேண்டும்தான், ஆனால் அவற்றை டெக்ஸ்ட்டில் கொண்டு வர முடியவில்லை. முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாகவோ இல்லை ‘த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா’ மாதிரியான ஒரு ஃபுல் அடல்ட் ஹ்யூமர் படமாகவோ எடுத்திருந்தால் ‘ஹர ஹர மஹாதேவகி’ கர கரக்காமல் இருந்திருக்கும்.

யூத்துகளை கவருவதற்காக இயக்குநர் எய்மிங் செய்திருக்கிறார்… அம்பும் போயிட்றது… ஆனால், மொத்தமாவே மிஸ்ஸு.

Advertisement