தம்பி இப்போ தான் உங்க வீடியோ பாத்தேன்.! விஜய்க்கு தமிழில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்..!

0
496
Harbhajan-sing
- Advertisement -

இளைய தளபதி விஜய், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி படு விமர்சியாக நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த விழா ஒரு இசை வெளியிட்டை போல அல்லாமல் நடிகர் விஜய்யின் மாநாடு போலே இருந்தது. அதிலும் இந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு வேலை நான் முதல்வராக வந்தால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

நடிகர் விஜய் பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Nota-Movie-Posters

-விளம்பரம்-

அந்த பதிவில் ,வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்படி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய ஹர்பஜன், தமிழ் மொழியை கற்றுவந்தார். இருப்பினும் இவரது அதிகராபூர்வ ட்விட்டர் கணக்கில் தமிழில் வரும் பதிவுகள் அனைத்தும் ஹர்பஜனின் அட்மின் தான் போட்டு வருக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement