இசை கச்சேரி நிகழ்ச்சியில் கால் தடுமாறி பாடகர் ஹரிஹரன் கீழே விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய திரை உலகில் மிகப் பிரபலமான பாடகராக திகழ்பவர் ஹரிஹரன். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி போன்ற பல மொழி படங்களில் பாடி இருக்கிறார். மேலும், இவர் கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்றவர். இவர் 80 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பாடிக்கொண்டிருக்கிறார்.
இவருடைய பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் படங்களில் மட்டும் இல்லாமல் தனியாக இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு இருந்தார்.
இலங்கை இசை கச்சேரி:
பின் நடிகை தமன்னா, கலா மாஸ்டர் போன்றவர்களும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் விஐபிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. என்ட்ரி இலவசம் என்பதால் இந்த விழாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருந்தார்கள். அப்போது விழாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்று இருந்தார்கள். இதனால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் ரசிகர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:
இந்த தள்ளுமுள்ளில் சிலருக்கு மூச்சு திணறல் கூட ஏற்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பின் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்த பிரபலங்களும் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் தவித்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி இருந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் மீடியாக்களில் இந்த நிகழ்ச்சி குறித்த விவாதங்கள் வைரலாகி இருந்தது.
நிகழ்ச்சி குறித்த விவரம்:
அதோட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் 35 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகமான நபர்கள் வந்திருந்தார்கள். இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றும் சிறிது நேரம் நிகழ்ச்சியும் நிறுத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்க தாமதமானது. ஆனால், நிகழ்ச்சி எதுவும் பாதியிலேயே நிறுத்தப்படவில்லை என்று கூறி இருந்தார்கள். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது.
கீழே விழுந்த ஹரிஹரன்:
இந்தநிலையில் இலங்கையை தொடர்ந்து சமீபத்தில் ஜெர்மனில் பாடகர் ஹரிஹரன் இசைக் கச்சேரியை நடத்தி இருக்கிறார். அங்கு அவர் உற்சாகமாக பாடல்களை பாடி நடனமாடி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி ஹரிஹரன் கீழே விழுந்திருக்கிறார். கீழே விழுந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதை சமாளித்து பாடி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.