ஆன்டி, குண்டு என கலாய்த்தவர்களுக்கு சீரியல் நடிகை ஹரிப்ரியா கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை திகழ்கிறது. சமீப காலமாக வெள்ளித்திரைக்கு சென்று படங்களைப் பார்ப்பதை விட சின்னத்திரை பக்கம் செல்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் நடிகை ஹரிப்பிரியா. சொல்லப்போனால் இவரை இசை என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரியமானவள் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர். இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார்.
ஹரிப்ரியா நடித்த சீரியல்கள்:
பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம். பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகை ஹரிப்ரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஹரிப்ரியா குடும்பம் பற்றிய தகவல்:
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பின் திடீரென்று விவாகரத்து செய்வதாக இவர்கள் இருவருமே அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியாக இருந்தது. பிரிவிற்கு பிறகு ஹரிப்ரியா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தொகுப்பாளர், நடிகை என பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட தொடர்.
எதிர்நீச்சல் சீரியல்:
இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் அப்பாவி மருமகள் நந்தினி கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா நடித்து கொண்டு வருகிறார். நந்தினி ரோல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ரீச் கிடைத்திருக்கிறது. இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்காக ஹரிப்பிரியா சமீபத்தில் லைவ் வந்திருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை ஷேர் செய்து இருக்கிறார்.
கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த ஹரிப்பிரியா:
பின் அவர் தன்னை பற்றி ஆண்டி, குண்டு என வரும் கமெண்ட்க்கு கூறி இருப்பது, ஆண்டியா இருந்தா தான் என்ன? வயசு ஆகுறது இயற்கை. வயசு ஏறிட்டு போறத எப்படி தப்பா சொல்ல முடியும். எல்லாருக்குமே வயசு ஆகத்தான் செய்யும். எனக்கு காலில் அடிபட்டு இருக்கு. அதனால் ஒர்க் அவுட் செய்ய முடியாது. இங்கு ஒல்லி, சிவப்பு தான் அழகு, கருப்பு, குண்டு அழகில்லை. அப்படியெல்லாம் இல்லை. எல்லாமே அழகு என்று கூறியிருக்கிறார். இதையடுத்து லைவில் வந்து ரசிகர் ஒருவர் அவரை ஆன்ட்டி என அழைத்து இருக்கிறார். உடனே இளமையாக இருக்க டிப்ஸ் கொடுங்கள் என ஹரிப்பிரியா பதில் கொடுத்திருக்கிறார்.